Friday, December 18, 2009

நல்ல வேளை "அது"வெல்லாம் இல்லை! எல்லியட்ஸ் பீச் ஓர் பார்வை!










நமது சென்னை மாநாகராட்சி 2.43 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம், பெசன்ட் நகர்க் கடற்கரையை அழகு படுத்திட- எப்படிச் செலவிடுகின்றார்கள் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லப் போவதில்லை.

ஏனெனில், செத்துப் போன பிரபல தலைவர்களின் பெயரை எல்லாம் பயன் படுத்தி "mazder roll" பட்டியல் தயாரித்து ஊழல் செய்த வரலாறு படைத்தவர்களின் புண்ணிய பூமி இது! அப்போது அந்த ஊழலில் இடம் பெறாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். யாருக்கும் வக்கலாத்து வாங்கவில்லை.உண்மையைக் கூறுகின்றேன்.

தருமமிகு சென்னை என்று சொன்ன வள்ளலார் மீது கொண்ட காதலால் அரசு தயவில் ஆரம்பித்த சங்கத்தை மீட்டெடுக்க சு.சமுத்திரம், நமது முதல்வர் கனவில் வந்தால்தான் முடியும்!

சித்தார்த் ஹண்டே ஒரு அமைப்பாளர். எதற்கு? பெசன்ட் நகர் கடற்கரையைச் சுத்தப்படுத்தியே தீர்வது என்பது அவரது தீர்மானம்! புதிய இயக்கத்தையே தோற்றுவித்திருக்கின்றார்.

RECLAIM OUR BEACH (ROB) என்பது அந்த அமைப்பின் பெயர். அவரும், அவரைப் போன்ற அவரது கூட்டாளிகளும் பெசன்ட் நகர் கடற்கரையை "சர்வே" செய்தனர், 4 நாட்களுக்கும் மேலாக!

கண்டெடுத்த பொருட்களின் பட்டியலை TOI சொன்னது சொன்னபடி காண்க!

1. CIGARETTE PACKS 1180

2. GLASS PIECES 1735

3. PLASTIC CUPS 3450

4. WATER PACKS 1560

5. SPOONS 3505

6. SILVER FOIL PACKETS 8505

இதற்கும் மேல் என்ன சொல்ல? அதே கடற்கரை மணல் மீது அமர்ந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் சுத்ததைப் பற்றி மணிக் கணக்காகப் பேசுவோம், நாம்!

மக்கள் வரிப் பணத்தில் உருவான கல்லூரிகளில் இலவசமாகப் படித்துவிட்டு "அப்பபா நமக்கு இந்த சென்னையெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தானே நாம்!"

இருந்தாலும் தூரத்தில் ஒரு பச்சை விளக்கின் ஒளி தெரிகின்றது. வெளிநாடா வேண்டவே வேண்டாம். என்று சொல்லிவிட்டுச் செயல்படும் நல்ல நல்ல பிள்ளைகள் நம்பிக்கையூட்டுகின்றார்கள்.

ஆம்! எவரெஸ்ட் அமைப்பினரைத்தான் குறிப்பிடுகின்றேன்.

எவரெஸ்ட் அமைப்பினரை SMS மூலம் தொடர்பு கொள்ள : 91/ 9976953287

E-MAIL மூலம் தொடர்பு கொள்ள: teameverest@yahoo.co.in

web address: http://teameverest.wordpress.com

எவரெஸ்ட்நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்திய "புதிய தலைமுறைக்கு"

நெஞ்சார்ந்த நன்றி!

ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் இன்னொரு இதழ் வந்த பின்னர்தான் தனது விலையில் மாற்றம் செய்தது. அத்தனை நாள் நாம் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருந்தோம் என்றுதானே பொருள்!

ஆனால், 5 ரூபாய்க்குப் புரட்சி செய்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை வார இதழைக் கண்ட பின்னரும் மற்றவை தன் இதழ்களின் விலையில் எத்தகைய மாற்றத்தினையும் செய்யவில்லையே ஏன்?

இதர தமிழ் நாளிதழ்கள் கூட தென் மாவட்டங்களில் வேறு குறைந்த விலைக்குத்தான் தரப்படுவதாகக் கேள்வி/ உண்மையா நண்பர்களே?

ஞாபக மறதி இந்தியர்களப் பிடித்த தேசீய நோய் என்ற கமலின் வசனத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைதான் காரணமா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.