Saturday, December 19, 2009

பயங்கரவாதம் ட்விட்டரையும் விட்டு வைக்க வில்லை.ட்விட்டர் தாக்கப் பட்டது; மீட்டெடுக்கவும் பட்டது;-







ட்விட்டர் என்பதை பறவைகளின் ஓசை என்றோ அல்லது வேறுவிதமாகவோ மொழிபெயர்ப்பதைவிட், "ட்விட்டர்" என்று அப்படியே எடுத்துக் கொள்வதென்பது, டாக்டர். மு.வரதாசனார், தமிழறிஞர், காட்டிய சரியான திசைவழி! அவ்சியமற்ற இடங்களில் எல்லாம் தமிழைச் சுத்தப் படுத்துகின்றேன் என்று புதிய வார்த்தைகளத் தேடி போக வேண்டாம். மனிதம் தந்த அருட்கொடை மொழி. மனிதப் பயன்பாடும் புரிந்துணர்வும்தான் முன்னிலை வ்கிக்கவேண்டும்.

நேற்று முழுவதும் "ட்விட்டர்" செயல்பாட்டில் ஓர் பினடைவினைச் சந்திக்க நேர்ந்தது. தொழில் நுட்பக் கோளாறு என்ற ஐயம் முதலில் எழுந்தது. ட்விட்டர் தன் செயல் திறன் குறைபாடுளோடு அதனோடு தொடர்புடைய மூல தளங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் இய்ங்கும் வேகம் குறைந்தது.

புகழ் பெற்ற சமூக வலைத்தளமான ட்விட்டர் பாதிப்புக்கான காரணம் தற்பொழுது க்ண்டறியப் பட்டுள்ளது, "ஈரானியன் சைபர் ஆர்மி" இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆம்! அவர்களால் ட்விட்ட்ர் துண்டாடப் பட்டது.( hacked )

கடந்த சில மாதங்களாகவே எதிர் கொள்ளும் ப்ல்வேறு பிரச்சினைகளூடன் இதுவும் சேர்ந்து கொண்டதாக ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

இதுபோன்ற தடங்கல்கள் வரும்பொழுதெல்லாம் கடவுச் சொல்லை (paass word) மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்ப்தே பயனீட்டாளர்களின் ஆலோசனை!

தற்சமயம் ட்விட்டர் தடைகளத் தகர்த்தெறிந்து இயல்பு நிலைக்கு வந்து விட்டது.

கால தேச எல்லை வர்த்தமானங்களைக் கடந்து உலகத்தினை ஐக்கியப் படுத்தும் இணயங்களைக் கூட பயங்கரவாதம் விட்டு வைக்காதா?

நன்றி: மாலை ஆங்கில நாளிதழ், நியூஸ் டுடே, சென்னை. 18-12-2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.