Monday, December 21, 2009

கமலஹாசன் சொன்ன "கடி" ஜோக் ? மற்றும் வேண்டுகோள்!


மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை கூறினார். "எழுத்தாளராக வேண்டும் என்ற ஆரம்ப நிலையில் உள்ளோர் அந்தந்தப் பத்திரிக்கைகளுக்கு ஏற்ப எழுதி வரவேண்டும். நன்கு வளர்ந்த பின்பு தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறலாம்." இது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல. எல்லாப் படைப்பாளிகளுக்கும் தான்!

ஆம்! உண்மைதான். மிகப் பிரமாண்டமாக வளர்ந்து விட்ட நிலையில், அண்மையில், சகலகலா வல்லவன் கமலஹாசன் அருமையான கருத்தொன்றைக் கூறியுள்ளார். நம்மால் நகைக்க மட்டும்தான் முடியும்.

"சினிமா லாபம் சம்பாதிப்பதற்கான சாதனம்-மீடியம்- அல்ல" ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் திருவாய் மலர்ந்தருளியுள்ள கருத்து இதுதான்.

"இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம்" என்று கருடன் சொன்னது அர்த்தமுள்ளது.

லாபமே இல்லாமல் நஷ்டத்திலேயேவா தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள்?

அடுத்து எங்காவது பேசும் பொழுது விளக்கம் சொல்வீர்களா திரு. கமல் அவர்களே?

நீங்களே படத்தின் தரத்தைத் தீர்மானித்து விட்டு , சொந்த வீடு கட்டுவது போல் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து உருவாக்கி படங்களைத் தயாரிப்பது லாபம் சம்பாதித்திட அல்ல என்று தாங்கள் கூறியிருப்பது உண்மையென்றால், படங்களை வெளியிட சினிமா தியேட்டர்களை ஏன் தேட வேண்டும்?

ஹாலிவுட் டெக்னிகல் சமாச்சாரங்களோடு தமிழ்ப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீரகள் என்றொரு ஆலோசனையையும் ரசிகர்களுக்குக் கூறியுள்ளீ ர்கள்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களாகத் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்க இன்னும் என்னவற்றையெல்லாம் நாங்கள் கடைப்பிடித்தால் தங்களுக்கு நல்லது என்பதையும் எங்களுக்குத் தவறாமல் சொல்லித் தாருங்கள்.

தங்களது ஒளிப் பேட்டியை- தெரிந்த நண்பர்கள் எல்லாம் தொடர்பு கொண்டு தங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்களே- அந்தப் பேட்டியை ரசித்துப் பார்த்தவன் என்ற முறையில் ஓர் வேண்டுகோள் வைக்கின்றேன்.

திரைப்படம் லாபம் சம்பாதிப்பதற்கான மீடியம் அல்ல போன்ற பொய்களை எல்லாம் சொல்லாதீர்கள். லாபமும் வரும் நஷ்டமும் வரும். அதுவும் ஒரு வியாபாரம்.

தமிழகத்தில் உள்ள பூ விற்பனை செய்பவர்கள் எல்லாம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமலிருக்க என்ன செய்வது என்று கூடிப் பேசப் போகின்றார்களாம். தங்கள் சிபார்சில் தமிழக முதல்வரிடம் சொல்லி சில லட்சங்களை வாங்கித் தாருங்களேன். தாங்கள் சினிமாத் தொழில் ஆலோசனைக் கூட்டம் சென்னயில் நடத்த 50 லட்சம் பெற்றது போல்!கூட்டத்திற்கு அவசியம் என்றால் கனிமொழி எம்.பி.-யை அழைத்துவிடுகின்றோம். தாங்கள் முதல்வரை அழைத்ததைப் போல.

நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கும் காலம் எல்லாம் தற்பொழுது மலையறிப் போய்விட்டது.

புதிய தலைப்புகளுக்குக் கூடவா பஞ்சமாகிப் போய் விட்டது. உங்கள் ரசிகர்களிடம் கேட்டால் ஆயிரம் தலைப்புக்களைத் தருவார்களே. படத் தலைப்பு சேமிப்பு வங்கி ஒன்றை நடத்தி, தேவைப் படும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் தங்களே தந்துதவலாமே?

இல்லை என்றால் எங்கள் கேபிள் சங்கரை அணுகுங்கள் , உதவுவார், தவறாமல்!

இனிமேலாவது பழைய பெயர்களையும், பாடல்களையும் திரும்பவும் பயன் படுத்தாமலிருப்பீர்களாக! இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.

நன்றி:நியூஸ் டுடே.

0 comments:

Post a Comment

Kindly post a comment.