இலவச மருத்துவ முகாம்கள்
ஆகஸ்டு 2008-ல் , விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் , கடுவானூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் இலவச மருத்துவ முகாம் மூலம் கண் புரைக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்
.
அதன் பின் அவர்கள் வாழ்க்கையே போர்க்களமானது. சற்றேரக் குறைய ஒரு கண் பார்வை பெரும்பாலனவர்களுக்குப் பறி போனது. பலர் அன்றாடங் காய்ச்சிகள்! வேலைக்குப் போனால் சோறு என்ற நிலையில் உள்ளவர்கள்.
50-வயதுடைய ராமு என்பவருக்கு இரு கண்களின் பார்வையுமே பறி போனது.
65-வயதுடைய கனம்மா வலக் கண் பார்வை பறி போனதிலிருந்து வேலைக்குச் செல்வதே இல்லை என்று கூறினார். கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னரே இந்த நிலை என்பதே அவர் சொன்னது.
திருச்சியில் உள்ள ஜோசப் ஹாஸ்பிடல் ஏற்பாடு செய்த இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமிலேயே இவர்கள் அனைவரும் சோதனை மேற்கொண்டனர் என்பதுதான் சோகமான செய்தி.
மீண்டும் பார்வை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது உறுதியானது.
அரசு அந்த தனியார் மருத்துவமனைக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. ஒரு லட்சம் நஷ்ட ஈடும், 400 ரூபாய் மாத பென்ஷனும் தரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இலவசங்கள் எல்லாம் ஏற்புடையது அல்ல என்பதே உண்மை.
0 comments:
Post a Comment
Kindly post a comment.