Friday, December 18, 2009

அ.ஆ. எழுதச் சொல்லும் சிகப்புக் கட்சித் தோழர்களை நினைத்தால்?




* Communist Party of India
* Communist Party of India (Marxist)
* Communist Party of India (Marxist-Leninist)
* Communist Party of India (Marxist-Leninist) New Democracy
* Communist Party of India (Marxist-Leninist) Red Flag

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்த நெறிமுறைகளின்படி, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையை 140 நாடுகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

கூட்டுபேர பேச்சு நடத்துவதற்கான உரிமைகளை150 நாடுகள்ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

"இந்தியாவில் இந்த இரு உரிமைகளும் இருப்பதாகக் கூறினாலும் இதுவரை சட்டமாக்கப் படவில்லை. இதனால் 91% தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைகளால் பயன் பெற இயலவில்லை."

இன்றளவும் சட்டமாக்கப் படவில்லை என்பது உண்மையானால் வெட்கமும் வேதனயும் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தொழர்களே?

பன்னாட்டு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் அமைக்க இயலவில்லை.வரையறுக்கப் பட்ட வேலை நேரம், விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும் வழங்கப் படவில்லை.

பெண்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து வேலை செய்யும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று திரும்பி அழைத்து வருவதால் தொழிற்சங்க உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெற முடியாத நிலை உள்ளது. (???)

ஏ.ஐ.டி.யூ,சி.; சி,ஐ.டி.யூ.சி.;எச்.எம்.எஸ்..பாரதீய மஸ்தூர் சங்கம்,தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அரசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை இதுதான்.

"தொழிலாளர் உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசு முன்வர வேண்டும்."

உங்களை நம்பியா இத்தனை நாட்கள் தொழிலாளர்கள் ???

source: தினமணி,18, டிசம்பர்,2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.