மணமகள் கருப்பு! நண்பர்கள் கேலி! மாப்பிள்ளை ஓட்டம்!
மும்பை போஹிவாடா பகுதியில் வசிப்பவர், ரவீ்ந்த்ரா வசந்த் அம்பவாகர், வயது 32.
60 000-ம் ரூபாய் செலவு செய்து நிச்சயதார்த்த விழாவை ஜாம் ஜாம் என்று நிகழ்த்தினர், பெண்வீட்டார். விழாவில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள், மணப் பெண் கருப்பு என்று சொல்லி் மாப்பிள்ளையைக் கேலி செய்தனர்.
பொறுக்க மாட்டாத, புது மாப்பிள்ளை, திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு ஓடிப் போய்விட்டார். திருமண அழைப்பிழை மாப்பிள்ளை வீட்டில் கொடுக்கச் சென்ற பெண்வீட்டார், அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் துறையில் புகார் செய்தனர். ட்ர்பே போலீசார் வரதட்சணைக் கொடுமை... உள்ளிட்ட பல வழக்குகளைப் பதிவு செய்து, மணமகனைத் தேடி வருகின்றனர்.
"கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு" பாட்டைக் கேட்டால் ஒருவேளை மாப்பிள்ளை ரவீந்த்ரா வசந்த் அம்பாவகர் மனம் மாற்க்கூடும். .ஆனால் மணமகள் ஏற்றுக் கொள்வாரா என்பதே கேள்வி?
மணமகனை மட்டும் வீடியோவில் பார்க்கலாம்.
நன்றி: மிட்-டே, மும்பை
0 comments:
Post a Comment
Kindly post a comment.