Saturday, December 12, 2009

68 ஆண்டுகளுக்குப்பின் ஐக்கியப் படுத்தியது எது? இது தான் காதலென்பதா? அப்படியானால் வாழும் குடும்ப வாழ்க்கைக்குப் பெயர் என்ன?





உலகப் போரினால் விளைந்த அழிவுகள் அனந்தம். ஆனாலும்அந்தப் போருக்குப் பின்னால் எல்லைகளத் தாண்டிய மனிதம் வெளிப்பட்ட நிகழ்வுகளும் அனந்தம்.அவற்றில் ஒன்று தான் இங்கே காண்பது!

படத்தில் உள்ள கப்பல்தான் அவர்கள் முத்ன் முதலில் சந்தித்துக் கொண்ட பூந்தோட்டம்! அப்பொழுது அவ்னுக்கு வயது 20. அவளின் வயதோ 18. கப்பலில் உள்ள அறையொன்றில் நோயாளியான பாட்டியுடன் இருக்கின்றாள், அந்த பருவப் பெண். உள்ளே சென்ற மதுவரக்கனின் தூண்டுதலால் அவளிடம் தவறாக நடக்க முற்படுகின்றது, ஓர். மனித மிருகம், அறையுள் நுழைந்து! காப்பாற்றிட உதவி கோரிச் சென்று அறிமுகமான இளைஞன்தான் அந்த அதிகாரி.

ஒரு சில தினங்க்ள் அந்தக் கப்பலில் சேர்ந்து இருந்து பழகிய பின் அவரவர் ஊருக்குத் திரும்பி விட்டனர், அபபடித் திரும்பிக் கொண்டிருக்கு பொழுது இடையில் ஒரு ஊரிலிருந்து அவள் அவருக்கு ஓர் தந்தி அனுப்புகின்றாள். "ALL MY LOVE BEST OF MY LUCK TOMORROW." -இதுவே அந்தத் தந்தியில் இடம் பெற் றிருந்த வாசகங்கள்.

அந்தக் கப்பலையும், அந்தத் தந்தியின் வாசகங்களையும் மேலே படத்தில் காணலாம்! 68 ஆண்டுகளுக்குப்பின் இந்த இனிமையான அனுபவத்தினை மலரும் நினைவுகளாக TIME பத்திரிக்கையில் அந்த ஆண் உரு்க்கமாக எழுதுகிறார். இப்பொழுது அவருக்கு வயது 89. மார்டின் என்றொரு மகனும் இருக்கின்றான். பத்திரிக்கைக் கட்டுரயை அவளும் படித்திட நேர்கின்றது,
படத்தில் உள்ள HAROLD PETTINGER பெயர் மட்டும் அவளுக்குப் பழைய ஞாபகங்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. அவள் பெயர், DOROTHY EASTWOOD. அவளுக்குத் திருமணமாகிக் குழந்தைகளும், கணவரும் இருக்கின்றனர்.

இருவரும் சந்திதுக் கொண்டு பழைய இனிக்கும் நினைவுகளப் பரிமாறிக் கொள்கின்றனர். 68 ஆண்டுகளுக்குப்பின் நடநத உண்மச் சந்திப்பு. இந்தியப் பண்பாடு இதற்கு இடங் கொடுக்குமா?

கண்ணகியும், மாதவியும் கோவலன் என்ற ஒரே கணவனுடன் தானே வாழ்ந்தார்கள். மாதவியோ அல்லது கண்ணகியோ பிரிதொரு ஆணை ஏறி்ட்டுப் பார்த்ததாகக்கூட இளங்கோவடிகள் எழு்தியிருக்கின்றாரா? இங்கே நாம் கற்பிற் சிறந்தவள் கண்ணகியா/ மாதவியா என்று பட்டி மன்றம் நடத்தியே காலங்கழித்து வி்ட்டோம். கோவலனது ந்டத்தை குறித்துப் பேசவே இல்லை.

கற்பு-காதல் எல்லாம் ஒரு தடவைதான் வரும் என்பது எல்லாம் கற்பனைக்கும் கதைக்கும் கவிதைக்கும் சினிமாவுக்கும் மட்டுமே சரி்யாய் இருக்கும்.

ஒருவன்/ஒருத்தி காதலித்து விட்டு காதல் நிறைவேறாமல், பிறிதொருவரை மணந்து வாழ்கின்ற தம்பதிகள் பலர் உண்டு நிஜ வாழ்க்கையில்! அவர்கள் வாழ்வது காதலினாலா? காதலித்த போது காதல் நிஜம்! திருமண வாழ்க்கயின் போது வாழும் வாழ்க்கையும் நிஜம். இதில் எது நிஜக் காதல். உண்மைக் காதல்? பொருளாதார வசதியுடன் ஏற்படும் காதல் எல்லாம் வெற்றி பெற்றுவிடும். இலையென்றால் தோல்விதான்!

ஏதோ இணைந்து வாழும் பொழுதேனும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருந்தால் போதும் என்ற காலக் கட்டத்தில் இருக்கின்றோம். சமூகக் கட்டுப்பாடு காதலையும் கற்பையும் காப்பாற்றி வருகின்றது என்று வேண்டு மானால் கூறலாம்.

சந்தர்ப்பங்கள் ஏற்படாதவரையிலும் எல்லோரும் நல்லவரே!

ஜெயகாந்தன் புத்தகங்கள் அருமை என்றால், அந்தப் புத்தகங்களி்ல் எழுதப்படும் தன்னுரை அதைவிட அருமையாக இருக்கும். ஓரிடத்தில் எழுதுவார்: ஆணோ/பெண்ணோ மற்றவரைப் பற்றிய கடந்த காலத்தைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

ஆணுக்குப் பெண் வேண்டும் பெண்ணுக்கு ஆண் வேண்டும். பழகியபின் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட மனோநிலை இருந்தால் வாழ்க்கை எப்பொழுதுமே வசந்தம் தான்!

தவறெ செய்யாதவர்கள் அந்தப் பெண்ணின் மீது கல்லெறியலாம் என்று ஏசுபிரான் சொன்னவுடனே காணாமற் போன கூட்டத்தவரின் வாரிசுகள் தானே இன்றைய ஆண் சமூகம்?

தான் மட்டும் திருமணத்திற்கு முன்பு யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகலாம். ஆனால் தனக்கு வருபவள் மட்டும் எந்த ஆடவனிடமும் பேசிக் கூட இருக்கக் கூடாது . இது எந்த வகையில் நியாயம்?

தீதும் நன்றும் பிறர் தர வாரா!-பூங்குன்றனார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.