Monday, December 14, 2009

பேசும் மண்ணறை:- பிரிவு--2- மண்ணறையில் பாதுகாப்பும் அண்ணலாரின் மெய்வாக்கும்:-


உயிரைப் பறிப்பதற்கு வானவர்கள் வருகை தருகின்றனர். ஆனால், உயிர் பறிப்பதற்கு ஆளாக வேண்டிய மனிதர் தனது பெற்றோர்களுக்குச் செய்த சிறப்பான கடமைகளும், நல் உதவிகளும் அவரைக் காப்பாற்றி விடுகின்றன.

"உலூ" என்பது தொழுகைக்கு முன் செய்த கட்டாயக் கடமையாகும். இந்த தூய அர்ஞ்ச்செயலைச் செய்த அவரை கப்ரின் வெதனையை விட்டும் காப்பாற்றி விடுகின்றது.

அவன் தவறாமல் செய்து வந்த "திக்ர்" என்னும் இறை வணக்கம் ,ஷைத்தான்களிடம் இருந்து அவனைக் காப்பாற்றி விடுகின்றது.

அந்த மனிதரின் தொடர்ச்சியான தொழுகையானது, தண்டனை அளிக்கக் கூடிய அமரர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி விடுகின்றது.

கடுமையான தாகம்! நா வறட்சி! நீர் நி்லை! நீரைப் பருக முற்படும் போது வராதே என்று விரட்டப் படுகின்றார். அது நாள் வரை நோற்று வந்த நோன்பு அவருக்குக் கைகொடுத்து நீரைப் பருகச் செய்கின்றது.

நபிமார்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். இவரும் அங்கே அமர ஆசைப் படுகின்றார். ஆனால் முடியவில்லை: வெளியேற்றப் படுகின்றார். இயல்பாக நாள்தோறும் குளித்து சுத்தமாயிருந்த ஜனாபத் என்ற நற்செயல் அவரை அழத்துச் சென்று அங்கே அமர வைத்துவிடுகின்றது.

இருட்டில் தடுமாறும் ஒருவரை, அவர் செய்த ஹஜ்ஜும், உம்றாவும் காப்பாற்றி வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

முஃமின்கள் விசுவாசிகள். அவர்களிடம் பேசிட முயற்சி. ஆனால் முஃமின்கள் முகம் சுழித்து விலகிச்செல்லல்! உறவினர்களைப் பேணி வாழ்ந்த நற்செயல் அவர்களை முஃமின்களிடம் இழுத்து வந்து அகம் முகம் மலர உறவாடச் செய்கின்றது.


நெருப்பில் தன் முகம் கருகிவிடாமல் செய்ய முயற்சிக்கின்றார்.அவர் செய்த அறம்-தர்மம்-ஸதக்கா நெருப்பிலிருந்து அவரைக் காப்பாற்றி விடுகின்றது.

வானவர்கள் இருவகை. தண்டனை அளிப்பவர்கள் ஒருவகை; காப்பாறுபவர்கள் மற்றொரு வகை. தண்டனை அளிப்பவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் அசைய முடியாதபடி பற்றிக் கொள்கின்றனர்."தஃவதே த்ப்லீக்" என்ற அவர் செய்த நற்செயல் அவரைக் காப்பாற்றி "ரஹமத்" என்ற நல்ல வானவரிடம் ஒப்படைக்கின்றது.

"மீஜான்" என்பது தராசு. தீமை இடப்பக்கத் தராசுத் தட்டி்லும், நன்மை வலது பக்க தராசுத் தட்டிலும் இருந்தது. வலது தட்டில் இருந்த இறையச்சம் அவரக் காப்பாற்றிப் புகழ் பெற வைத்து விட்டது.

சிறு வயதில் இறந்து போன அவரின் இளங்க் குழந்தைகளின் நன்மைகள் ஒருவறைக் காப்பாற்றியது.

நகரத்தின் எல்லைக்கே வந்து விட்ட ஒருவரை, இறைவன்பால் கொண்டிருந்த அச்சவுணர்வே அவரைக் காப்பாறிவிட்டது.

நரகத்திலேயே வீழ்ந்து விட்ட ஒருவரை, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய அவரது அச்ச உணர்வே அவரை நரகத்திலிருந்து காப்பாறி விட்டது.

"சிராத்துல் முஸ்தகீம்" ஒரு பாலம். கடப்பது கடினம்.அவரது நல்லெண்னம் பாலத்தைக் கடந்திட உதவி செய்கின்றது.

அதே பாலத்தில் ஒருவர் தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றார். இறைவன் மீது கூறிய ஸலவாத்து அவரை தூக்கி நிறுத்தி நெராக நடக்கச் செய்கி்ன்றது.

புறம் பேசியவர்களின் உதடுகள் வெட்டப் பட்டுக் கிடக்கின்றன.

முஸ்லீம் ஆண்- பெண் மீது வீண் அவதூறு செய்தவர்கள். வதந்தியைப் பரப்பியவர்கள் நாக்குகள் தொங்க விட்ட வண்ணம் இருந்தன.

ஆதாரம்: (திப்ரானி-நவாதிருல் உஸுள்-தர்ஹீப்)

மௌல்வீ் ஏ.அப்துல்கனீ மன்பயீ எழுதியது.அனஸ் புக் சென்டர், 81,அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1-லிருந்து1992, 1993, 1995, 1996-ல் 4-ஆம் பதிப்பாக வெளியிட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.