Museum being spruced for visit of Cotton’s great-grandson B.V.S. Bhaskar It houses machinery tools used during construction of Dowleswaram Barrage Museum has on display 1830-make plough machine The dignitaries to also unveil Arthur Cotton statue at Cotton Peta
"Dhavaleswaram Barrage on River Godavari near Rajahmudry is a major irrigation source to the lands. Electric supply to this district is mainly from Machkand hydro power project and Natural gas power plant at Vijjeswaram in East Godavari district. All Degree Colleges are affiliated to Andhra University - Vishakapatnam."
Sir Arthur Cotton built a barrage across river Godavari here. The Sir Arthur Cotton museum is located in Dhavaleswaram. It contains many pictures describing the working of the dam and display of the tools used during the construction. This barrage provides water for east godavari and west godavari for agricultural purposes. There is a Sir Arthur Cotton statue in the village. Another attraction everyone should think of, boating on river Godavari, it an experience that one can cherish through out lifetime.
Charles Cotton’s visit on Nov. 29
Kakinada: Robert Charles Cotton, the great grandson of Sir Arthur Cotton, and his wife Nicolette Anne Cotton are visiting Cotton museum, Dowleswaram barrage and some other prominent places in Rajahmundry on November 29 between 2.30 p.m. and 4.30 p.m. Full Article at The Hindu
தாத்தா ஆர்தர் காட்டன் அருங் காட்சியகத்தையும் பார்த்துச் சென்றதை இந்து ஆங்கில நாளிதழ் (ஆந்திரப் பதிப்பு ?) வெளியிட்ட செய்தியைத்தான் மேலே பார்க்கிறீர்கள்
வியாபாரம் செய்யவந்த வெள்ளையர்கள், தாங்கள் எந்தப் பகுதியில் வாழுமாறு தலைமை வகிப்போரால் கட்டளையிடப் பட்டார்களோ அந்தப் பூமியைத் தங்கள் சொந்த மண்ணாகவே கருதித்தான் வாழ்க்கை நடத்தினார்கள், வெள்ளையர்கள்! நீதி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டவில்லை. அரசியல் வழக்குகளில் கூட நேர்மையைக் கடைப் பிடித்துள்ளார்கள்.
தான் வசிக்குமிடத்தில் உள்ள மக்களின் குறைபாடுகளைக் களைந்திட தி்ட்டம் தீட்டினார்கள்..
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே கீழே சுட்டிக் காட்டியுள்ளேன். அதை இன்னும் 20-25 வரிகளுக்குப் பின் ஓர் உண்மை நிகழ்ச்சியைக் குறித்துள்ளேன். அந்தக் கவர்னரின் பேரன், மனைவியுடன் நவம்பர் இறுதியில் இந்தியாவிற்கு வந்து, தாத்தாவின் செயல்திறனக் கண்டுசென்றுள்ளார்.
எப்படியாவது தான் பதவியில் இருக்க வேண்டும் என்ற தற்போதைய அரசியல் தலைவர்களின் ஒரே எண்ணம்தான் இன்றைய அத்தனை தொல்லைகளுக்கும் தலையாய காரணம்.
கட்சியோ/அரசோ எந்தப் பதவியாக இருந்தாலும் ஓரிரு தடவைக்கு மேல் ஒருவர் அந்தப் பதவியில் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுத்தியிருந்தால் தனிதனியாக எங்கள் பகுதிகளைப் பிரித்துக் கொடு என்ற கோஷம் எழுந்திருக்காது.
பதவிகள் பங்கிடப் படாமல் சிலர் மட்டும் எப்பொழுதுமே பல்லக்கில் அமர்ந்து கொண்டு பிறறைப் பல்லக்குத் தூக்க மட்டுமே பயன்படுத்தி வருவதால் ஏற்படும் கோளாறுகளே அத்தனை சிக்கல்களுக்கும் காரணிகளாய்த் திகழ்கின்றன.
தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். விகிதாச்சாரப் பிரதித்துவ முறை அமுலாக்கப் பட்டுவிட்டால், தனிமனித முக்கியத்துவங்கள் அடிபட்டுப்போகும்.
கட்சிச் சின்னங்ககளுக்கே வாக்குக் கேட்கும் முறை நடைமுறைப் பழக்கமாகும்.கட்சிக்கு இததனை MLA/MP-க்கள் என்ற நிலை ஏற்படும் போது, போட்டி-பூசல்-பொறாமை-செல்வாக்கு-அடிதடி-கலாட்டா எல்லாம் கட்சிக்குள்ளேயே முடிந்து போகும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கியமாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டே தீரும். கோமாளிக் கூட்டணிச் சித்து ஏமாற்று வேலைகளெல்லாம் எடுபடாமற் போகும். மத்தியில் இவர்களுக்குப் பதவி வேண்டுமாம். மாநிலத்தில் அவர்களுக்குப் பதவி கிடையாதாம். என்னையா இந்த பூச்சுற்றல் வேலை?
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஏதோஒரு வகையில் ஈடுகட்டப் படுகின்றார்கள் என்றுதானே பொருள்?
சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் வழி்யில் இராஜமுந்திரி என்றொரு நகரம் வரும். இதன் அசல் பெயர் இராஜ மகேந்திரவரம் என்பதாகும் ரயில்வே பயணச்சீட்டில் அப்படித்தான் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்துதான் தெலுங்கு,தமிழ்,இந்தி என பல சினிமா கதாநாயகிகள் நடிக்க வந்துள்ளனர்.
இந்த ஊரைச் செழிப்புள்ள பூமியாக்குவதில் கோதாவரி நதிக்குப் பெரும் பங்குண்டு. வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில், ஒரு,ஆங்கிலேயக் கவர்னர் தன் மனைவியுடன் மாலை நேரத்தில் நடைப்பயணம் செல்கின்றார். அப்பொழு்து அங்கே ஒரு தாய் தான் பெற்ற பிள்ளையை விற்பதற்கு விலை பேசிய செய்தியைக் கேள்விப் படுகின்றார். பெருங் கவலை கொள்கின்றார். இரவு முழுவதும் தூங்கவே இல்லை. வற்றாத ஜீவநதி கோதாவரி பாயும் பிரதேசத்தில் பெற்ற பிள்ளையை விற்கும் அளவிற்கு வறுமையேற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிகின்றார். நதிப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் நீர்ப்பாசன வசதியின்மைதான் என்பது விளங்குகின்றது, அவர் ஓர் பொறியாளரும் ஆவார். எனவே, நதி்நீரைப் பரவலாக்கத் திட்டமிடுகின்றார்.
இராஜமுந்திரியிலிருந்து சில மைல்தூரத்தில் தவளேஸ்வரம் என்ற இடத்தில் சிறியதோர் அணக்கட்டி ஆற்றினத் திருப்பி விட்டு, வறட்சியைத் தொலைத்துக் கட்டுகின்றார். அந்தப் பகுதி மக்கள் அவரைத் தெய்வமெனப் போற்றித் துதிக்கின்றனர். அந்த தவளேஸ்வரத்தில் அவரது நினைவாகப் பூங்கா ஒன்று உள்ளது. அவருக்குச் சிலை ஒன்றும் எழுப்பியுள்ளனர். அவரது பெயர் ஆர்தர் கார்ட்டன். பூங்காவினையும் சிலையையும் பிறிதொரு இடத்தில் உள்ள அருங்க்கட்சியகத்தையும் இன்றும் காணலாம்!
நம்மை ஆண்ட வெள்ளையரிடம் உள்ள வெள்ளை உள்ளம் நமது நாட்டினரிடம் இல்லாமற் போனதேன்? மனிதாபிமானம் எங்கே?
முல்லைப் பெரியார் அணயைக் கட்டித்தர ஆங்கிலேயர்களால் முடிந்தது.அதில் ஒரு சில அடி உயரம் அதிக அளவில் நீரைத் தேக்கிவைத்திட நம்மால் இன்னும் முடிவெடுக்க இயலவில்லை.ஏன்? தேசீயம் பேசுவது என்ன நியாயம்?
திருவள்ளுவர் சிலையைப் பெங்களுரில் வைத்திட மாமாங்கம் ஆனதே ஏன்?
ஹொகனேக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் என்ன ஆனது?
மேற்குத் தொடர்ச்சி மலையில் பாய்ந்திடும் ஆறு், கீரியாறு. கீரியாற்றுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அது நிறைவேறினால், திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில்,தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டங்கள் முப்போகம் நெல் விளையும் பொன் விளையும் பூமியாகிவிடும்.வேலை வாய்ப்புப் பெருகும். வறுமை நீங்கும். ஏன் நிறைவேற்ற முடியவில்லை.? அந்தக் காலத்தில் அந்தப் பகுதிகளில் கீரியாறு திட்டம்தான் தேர்தல் முழக்கமாக இருக்கும். 150-200 ஆண்டுகளிக்கு மேலாக அரசியல்வாதிகளால் மறந்து போன திட்டம் தான் இது.
ஆரம்பத்திலேயே நிறைவேற்றியிருந்தால் செலவு குறைந்திருக்கும். 100/150 ஆண்டுகள் கிடப்பில் போட்டு விட்டார்கள். ஒரு கட்டத்தில் பொருட்செலவு அதிகமாகும் என்று சொல்லித் திட்டத்தையே கைகழுவி விட்டார்கள். அந்த ஊர்க்காரரான கலிங்கப்பட்டியார் கூட கைவிரித்துவிட்டார்.
வெல்ளையரிடம் இருந்த மனிதாபிமானம் கூட சுதந்திர இந்தியாவில் ஆட்சி செய்யும் நம்மவருக்கு இல்லையே ஏன்?
அந்த ஆற்றின் நீர் யாருக்கும் பயன்படாமல் கடலில்கலந்து வீணாகிக் கொண்டிருப்பதுதானே நிஜம்?
இந்தியா என் தாய் நாடு. நாம் எல்லோரும் சகோதரர்கள் என்பதெல்லாம் ஏட்டளவில்தானா?
is final sentence in that letter reads like this: “My Lord, one day’s flow in the Godavari river during high floods is equal to one whole year’s flow in the Thames River.”-ஆர்தர் காட்டன்
28-11-2009 இந்து ஆங்கில நாளிதழ் (ஆந்திரம்) பிரசுரித்திருக்கும் செய்தியை ஒவ்வொரு இந்திய அரசியல்வாதியும் படிக்க வேண்டும்.
தமிழக முதல்வரின் செல்லுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இது பார்வட் செய்யப்பட்டுள்ளது.
http://www.hinduonnet.com/2009/11/28/stories/2009112852790300.htm
0 comments:
Post a Comment
Kindly post a comment.