Thursday, November 5, 2009

LOVE OUR TOILET- சிங்கப்பூரில் 2-4,டிசம்பர்-2009-ல் மாநாடு


19-11-2009 WORLD TOILET DAY

உலகத்தில் 40 சதவிகிதம் பேர்,இந்தியாவில் 50 சதவிகிதம் பேர்,கஃகூஸ் இன்றித் தத்தளிக்கின்றனர்.


ஜேக் சிம் (JACK SIM)ஓர் சிங்கப்பூர் இளைஞர்,24 வயது (1998)மக்களுக்குப் பயனுள்ளவராக வாழ்ந்திட ஆசைப்படுகின்றார்.செய்துகொண்டிருந்த வியாபாரத்தை விட்டுவிடுகின்றார்.
சமூகத்தின் சுகாதாரம்-ஆரோக்கியம் பற்றிச் சிந்திக்கின்றார்.TOILET-பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கின்றார்.

REST ROOM ASSOCIATION OF SINGAPPORE(RAS-1998)

WORLD TOILET ORGANIZATION(WTO-2001)

WORLD TOILET COLLEGE(WTC-2005)

உருவாக்கப்படுகின்றன.

50-க்கும் மேற்பட்ட உலக அமைப்புக்களின் கூட்டமைப்பு-SUSTAINABLE SANITATION ALIANCE
ஜேக்-ஐ அரவணைத்துக் கொள்கின்றது.சிங்கப்பூர் பசுமைத்த்திட்டப் பரிசு-2012வழங்கிப் பாராட்டுகின்றது,சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைப்பு.(2004)ASHOKA GLOBEL FELLOW- என்று உலகம் போற்றுகின்றது.உலகப் புகழ், TIME MAGAZINE,சுற்றுப்புறச் சூழலின் கதாநாயகன் (2008)
என்று பாராட்டி மகிழ்ந்தது.


இன்று JAKE SIM,WORLD ECONOMIC FORUM'S GLOBAL AGENDA COUNCILS (GEC)FOR WATER SECURITY AND SOCIAL ENTREPRENEURSHIP-ன் முக்கியப் பிரமுகர்.பொது வாழ்வில் ஈடுபடத் துவங்கும் பொழுது பட்டப்படிப்பு இல்லாத 24-வயது இளைஞர்.இன்று (2009) ஓர் பல்கலைக் கழக POST GRADUATE STUDENT.தண்ணீர் குறித்துப் போதிக்கும் VISITING PROFESSOR.


இயல்பான வழ்க்கைக்கே போராட வேண்டியுள்ள இந்தியச் சூழலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நற்பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அவர்கள் அனைவரும் ஐக்கியமாக வேண்டும்.சிங்கப்பூர் இளைஞரைப்போல் வெற்றியும் பெறவேண்டும்.


இந்தியாவில் எல்லோருக்கும் உறைவிடம் கிடையாது.அப்படியே இருந்தாலும் கழிப்பறை வசதிகள் கிடையாது.குடிசைவாழ் மக்கள்-சாலையோரங்களில் வசிப்போர் நடைபாதைவாசிகள் நாள்தோறும்படும் துயரங்கள் சொல்லவும் முடியுமோ?


கழிப்பறை வசதியுள்ள பல பகுதிகளில்பாதாளச் சாக்கடை வசதிகள் இல்லை.அடுக்கு மாடி வீடுகள் ஆயிரமாயிரம் எழுப்பப்படும் சென்னை மாநகரின் புறநகர்த் தெருக்களில்
தினந்தோறும்/ மழைக்காலங்களிலும் மக்கள் நடமாடுவது கழிப்பறை/சாக்கடைநீர்மீதுதான்.
சுத்தம் சோறு போடும் என்று சொல்லிக்கொண்டு மனிதக்கழிவுகளை வாழும்பகுதிக்குள்
சேமித்து வைக்கின்றோம். நிரம்பி வழிந்து சுத்தப்படுத்தலும் அடைத்துக்கொண்டால் அல்லல்படுதலும் சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட சங்கடங்கள்.


மார்ட்யர் (MARTYAR) என்ற ஊர், பஞ்சாபில், மாவீரன் பகத்சிங் பிறந்த புண்ணிய பூமி.
அருகில் உள்ளது கரோடி என்னும் சிற்றூர்.Mr.GILL என்ற வெளிநாட்டுவாழ்இந்தியரின்சொந்தக் கிராமம். அவரது ஆலோசனையில் அங்கே வீடுதோரும் கழிப்பறைகள் அத்தனையும் பாதாளச் சாக்கடைகளில் இணைப்பு. ஊருக்குவெளியே கொண்டுசென்று சூரியவெளிச்சம்படும் திறந்த வெளியில் உலரவைத்து நீரைப்பிரித்துச் சுத்திகரிப்பு. எஞ்சியவை விவசாயத்திற்கு உரமாகப் பயன்பாடு.


பகத்சிங் பிறந்தமண்ணின் பக்கத்துக் கிராமம் சுற்றுப்புறச் சூழல் பேணும் பெருமையை
வாய்ப்புக்கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்துச் சொல்லி வருபவர் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

வலைத்தளங்களில் எழுதும் அனைவரும் LOVE OUR TOILET-என்ற முழக்கத்துடன்
சிங்கப்பூரில் டிசம்பர் 2-4, 2009-ல் நிகழப்போகும் மாநாடு குறித்தும் எழுத வேண்டும்.எல்லோரிடமும் பேசவும் வேண்டும்.அனைத்து ஊடகங்களின் கவனத்திற்கும்
கொண்டு செல்லவும் வேண்டும்.


இளைஞர் சுகாதார விளக்கம், இரண்டாம் பாகம்.


நான்காம் வகுப்பிற்கு நன்கமைத்தது.ம.முத்துக்குமாரசாமி பிள்ளை எழுதியது,இரண்டாம் பதிப்பு, 1937-ஆம் ஆண்டு.திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை அருகில் உள்ள நடைபாதைக் கடைகளில் பல ஆண்டுகளுக்குமுன் வாங்கிய சிறு புத்தகம்.

பக்கம் 16-ல். உள்ளது, உள்ளபடி.

13. கக்கூஸ்.

கூடிய வரையில் ஒவ்வொரு வீட்டிற்கும் கக்கூஸ் அமைப்பது அவசியம்.
அதை வீட்டின் தெருப்பக்கத்தில் அமைப்பது நல்லது.
கக்கூஸ்களை மேற்புறம்
திறந்திருக்கும்படியும் தோட்டி பிரவேசிப்பதற்குத் தகுந்த உயரமுள்ள வாயிற்படியோடும்
கட்டப்பட்டிருக்கவேண்டும். பிரதிதினமும் ஏராளமாய்த் தண்ணீர் விட்டு இரண்டுவேளையும்
கழுவிச் சுத்தி செய்யவேண்டும்.தெருவிலும்,வெளியிலும் மலஜலங்களைக் கழிப்பது
அசுசியையும், கொக்குப்புழுநோய், வாந்திபேதி முதலிய வியாதிகளை உண்டாக்கும்.

கிராமங்களில் இருப்பவர்கள் கண்ட இடங்களில் மலஜலம் கழிக்கின்றனர்.இவ்வாறு
செய்வதால் தேகசுகத்திற்குக் கெடுதியை விளைவிக்கும். வயல்களில் பள்ளந்தோண்டி
அவைகளில் மலஜலங்க கழித்த பிறகு அவைகளை மண்ணால் மூடிவிட்டால்,
வயல்களுக்குச் சிறந்த எருவாகும்
.


அன்றைய நிலையே இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.சரியா?தப்பா?மனிதக்கழிவுகளை மனிதர் சுமக்கும்/அகற்றும் இழிநிலை நீங்கிவிட்டதா என்று ஓ.. பக்கங்களைத் தற்பொழுது குமுதத்தில் துணிச்சலோடு எழுதிவரும் பன்முகத் திறமை கொண்ட படைப்பாளி
சென்னை ஞாநியிடம்தான் கேட்க வேண்டும்.ஏனெனில், இது குறித்து எனக்குத் தெரிந்தவரை முதன் முதலில் எழுதியவரும் பேசியவரும் அவர்தான்.


PROPER SANITATION IS THE NUMER ONE PREVENTIVE MEDICINE-என்று WORLD TOILET ORGANIZATION (WTO)-உலகமெங்கும் உணர்த்திவரும் உண்மையைப் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வலைத்தளத்தில் எழுதிவருவோர் அனைவரது
முழுமுதற் கடமையாகக் கொள்வோம்.

நாம் வசிக்கும் பகுதிகளின் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொகுதி வளர்ச்சி நிதி
சுகாதார வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவோம்.என்ன ? செயலில் இறங்கலாமா நண்பர்களே ?

05-11-2009 வியாழன் காலையில் தோன்றிய எண்ணம். வலைத்தளங்களை அலசினேன்.
TOILET-க்கு உலகளாவிய அளவில் அரசுசாரா அமைப்பொன்று இயங்கிவருவது பெரும் வியப்பினைத் தந்தது. 2007-ல், நமது தலைநகர் டெல்லியிலும் WTO மாநாடு நடந்துள்ள விபரமும் தெரிந்தது.

மேலும் தகவல் வேண்டுவோர்,

  • " WORLDTOILET.ORG "


  • " sanitationupdates.worldpress.com "


  • "TIME.com"
  • - முதலான வலைத்தளங்களுக்குச் செல்லலாம்.

    info@worldtoilet.org- e-mail முகவரிக்கும்

    தொடர்பு கொள்ளலாம்.,





    0 comments:

    Post a Comment

    Kindly post a comment.