Wednesday, November 4, 2009

ஏழ்மையிலும் நேர்மை காத்த எழும்பூர் துப்புரவுப் பணியாளர்கள்

வசதியும், வாய்ப்பும் கொண்டோரே
கிடைத்ததைச் சுருட்டும்,இந்நாளில்
வறுமையில் செம்மை காத்திட்ட

மூன்று முத்தான பெண்களின் நற்செயலைப்
படத்துடன் வெளியிட்டுப் பாராட்டியுள்ளன
நாளேடுகள்-(03-11-2009).

எழும்பூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
வழக்கம்போல் வந்தது ஞாயிறன்று-(01-11-2009).
வண்டியில் கிடந்தது ஓர் கேமரா!

கண்டனர், மூன்று துப்புரவுப் பணியாளர்கள்,
முத்துலட்சுமி,சத்யபாமா,ஜெயலட்சுமி!
உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வெற்றிவேற்கை-அந்நாள் அரசர்,
அதிவீர ராமபாண்டியன்
நமக்குப் படைத்தளித்திட்டதோர்
செய்யுள் நூல்.

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.
என்று வாழ்வியல் நெறியினை வகுத்தளிக்கின்றது.

புலவர் காட்டிய செந்நெறியினை
ஏழ்மையிலும் பேணிக் காத்திட்ட

மூன்று பெண்மணிகளையும்
போற்றிப் புகழ்ந்திடுவோம்.

1 comments:

  1. நேர்மை இன்னும் செத்துவிடவில்லை
    உண்மை இன்னும் மாறுபடவில்லை
    வறுமையிலும் செம்மை இன்னும் போய்விடவில்லை
    வாய்மை இன்னும் கழுவேறிவிடவில்லை
    உண்மை ஒரு நாள் வெளியாகும் -அதில்
    உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும் “ பட்டுகோட்டையார்
    வார்த்தைகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றன

    ReplyDelete

Kindly post a comment.