Monday, November 2, 2009

கோவையில் தோழர் அறக்கட்டளை



கோவையில் வாழும் அன்பு நெஞ்சங் கொண்டோர் சிலர்,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்,
வாடிய வள்ளலார் உள்ளம் படைத்தவர்கள்.


வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட/வறுமையால் இறுதிக்கடன் செய்யஇயலாத/விபத்துக்குள்ளாகி உரிமை கோரப்படாத/கொடிய நோய்க்குள்ளாகி ஒதுக்கப்பட்ட-உயிரற்ற உடல்களைக் கண்டடைந்து,உரிய முறையில், காவல்துறை அனுமதி பெற்று,மரியாதையுடன் வழியனுப்பி வைக்கின்றார்கள்.


மார்ச்,2004-ல் துவங்கியது,இவர்களது, மகத்தான பணி!பிரார்த்திக்கும் உதடுகளைவிட,
உதவுங் கரங்களே உயர்ந்தன என்ற குறிக்கோளுடன்செயலாற்றி வருகின்றனர். இவர்களால்,
இன்றளவும்,இறுதிவழியனுப்பப்பட்டஉடல்களின் எண்ணிக்கை 720-க்கும் அதிகம்!


"தோழர் ட்ரஸ்ட்" ரத்த தானத்திலும் சிறப்புடையவர்கள்.கௌசிக்,ஸ்ரீராம்,அப்பாஸ் -மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் முயற்சியில் இன்றுவரை வழங்கப்பட்ட ரத்தத்தின் அளவு,
1600 -UNITS--களுக்கும் மேல்!கோவைமாநகரமே வியந்து போற்றுகின்றது.
பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன.


தொண்டுளங் கொண்ட நிர்வாகிகள்,பா.சாந்தகுமார்,க.ரா.ஜீவானந்தம்,செ.இப்ராகிம்,
பா.அண்ணாதுரை,சீ.சம்பத்குமார் உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்துவோம்; வணங்குவோம்; உதவி மகிழ்வோம்.


தொடர்பிற்கு:

Web :- www.thozhartrust.com/

e-mail :-info@thozhartrust.com

--நன்றியுடன்.

2 comments:

  1. தோழர் ட்ரஸ்ட்டை அறிமுகம் செய்து அவர்களின் வலைதள, மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்களும் அவர்களின் சேவையில் பங்கு கொண்டிருக்கிறீர்கள் ஐயா.

    இப்படியான மிகப் பயனுள்ள பதிவுகளுக்கு மிகுந்த நன்றிகள்.

    //பிரார்த்திக்கும் உதடுகளைவிட,
    உதவுங் கரங்களே உயர்ந்தன//

    எத்தனை சத்தியமான வார்த்தை.

    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இறந்துபோன இதயங்களால் பாராட்டப்படும் ஒரே இதயங்கள் இவர்கள்
    Prof Punch - kamalapunch@gmail.com

    ReplyDelete

Kindly post a comment.