Saturday, November 7, 2009

குற்றங்களைக் குறைத்திடப் புதிய பாதை

"குற்றங்கள் குறைய , வறுமை ஒழிய வேண்டும்.வறுமையை ஒழித்திட, வேலைவாய்ப்புப் பெருக வேண்டும்.வேலைவாய்ப்புப் பெருகிட, கல்வியறிவு அவசியம்."என்று சொல்கின்றார், கோவை மாநகர கமிஷனர், சிவனாண்டி.சொல்வதோடு நின்றுவிடாமல் செயலிலும் காட்டுகின்றார்.இளமைப் பருவத்தே கல்விப்பயிர் செய்ய அவரது ஜீவாலயா அறக்கட்டளை
ஏழை மாணவர்களுக்குத் தாராளமாய் உதவுகின்றது.

அண்மையில் அவரது முயற்சியில் 150-ஏழை மாணாக்கர்களுக்கு கல்விவசதி கிடைத்தது.
100-மாணாக்கருக்கான செலவுகளுக்கு K.N.மணிவணணன் Director, Truevalue Homes பொறுப்பேற்றுக்கொண்டார்.50- மாணாக்கருக்கான செலவுகளை,நரேன் கார்த்திகேயன்,
கார்ப் பந்தயவீரர் ஏற்றுக்கொண்டார்.

அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட,ஏழைக்கு எழுத்தறிவிப்பது உயர்ந்தது, என்றுதானே
எட்டயபுரத்து மீசைக் கவிஞர், மகாகவி,சுப்பிரமணிய பாரதியார் சொல்லிச் சென்றார்.

ஏழை-எளியோர் இளமையிற் கற்றிட உதவிடும்கோவை போலீஸ் கமிஷனர் நீடுழி வாழ்க.

2 comments:

  1. இப்படிக் கூட போலீ்ஸ் துறையி்ல் இருக்கிறார்களா??

    ReplyDelete
  2. நல்ல செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

Kindly post a comment.