Saturday, November 14, 2009

"INDIA'S TOILET KING" & "MUSEUM FOR TOILET"




"எளிமையான சுகாதார இயக்கம்" (SULAB SANITATION MOVEMENT IN INDIA)தோற்றுவித்தவர்.(1970).சுகாதாரமற்ற கழிப்பறைப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தியவர்.குடிசைப் பகுதிகளில்,கிராமங்களில்,நகர்ப்புற்ம் மற்றும் மாவட்டங்களில் ஆரோக்கியமான சுகாதாரம் நிலவச் செய்தவர்.

இவரது TOILET இயக்கம் உலகிலும் பரவிவருகின்றது. இந்தியாவின் பல பகுதிகளிலும், உலக நாடுகள் பலவற்றிலும் இவரது கண்டுபிடிப்பு (TWIN PIT,POUR FLUSH,TOILET SYSTEM) நடைமுறையில் உள்ளது.

குறைந்த செலவு்; குறைந்த அளவு தண்ணீர் பயன்பாடு; வெளியேறும் வாயு சமையலுக்கு இதுவே சிற்ப்பம்சம். 60000-க்கும் அதிகமான TOILET-CUM-BATH COMPLEXES & 62 EXCRETA BASED BIO-GAS PLENTES இந்தியாவில் உள்ளன. தமிழகமும் இதில் அடங்கும்.

இவர் 1943-ல் பீஹார், வைஷாலி மாவட்டம்,ராம்பூர் பகேல் (VILLAGE RAMPUR,BAGHEL,DISTRICT;VAISHALI,BIHAR,INDIA) கிராமத்தில் பிற்ந்தவர்.பிராமண குலத்தவர்.பாட்னா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்.ஆய்வுகளுக்கும், முனைவர் பட்டம் பெறவும் இவர் தேர்ந்தெடுத்த துறை:- நரசுத்தித் தொழிலாளர் வாழ்க்கை விடுதலை..மிகமிகக் குறைந்த செலவில் சுத்தம் சுகாதாரம்பேணுதல்..கழிப்பறை குறி்த்த சமாச்சாரங்கள்தான்.

இந்த சமூகவியல் தொண்டரை ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி அறிவியல் கலாச்சார மையம் ஆலோசகராக்கிப் பெருமை கொண்டது.

தண்ணீர்ப் பயன்பாடு்கள் மற்றும் சமத்துவச் செயல்படுகளுக்காக உலகத்தில் மிகப்பெரிய பரிசு ஆகஸ்டு 2009-ல் இவருக்குக் கிடைத்துள்ளது.1,50,000-ம் டாலர் ரொக்கம் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட படிகத்தாலான சிற்பம்.

INDIAN SANITATION INNOVATOR AND SOCIAL REFORMER AWARD 2009 STOCKHOLM-BY THE STOCKHOLM INTERNATIONAL WATER INSTITUTE. THE PATRON OF THE FORUM IS H.M. KING CARL XVI GUSTAF OF SWEDEN.

1995-ல் இவர் ஹாங்ஹாங் மாநாட்டில் அரங்கேற்றம் செய்த HISTORY OF TOILET-ஆய்வறி்க்கை ஓர் வரலாற்றுப் பெட்டகம்.


தீண்டாமைத் து்யர் துடைத்திட இவர் ஆற்றிவரும் அரும் பணிகள் ஏராளம். இத்தனை பெரு்மைகளுக்கும் சொந்தக்காரர், முனைவர்.பிந்தேஷ்வர் பதக் (Dr.BINDESWAR PATHAK,Ph.D;D.Litt,Founder of SULAB INTERNATIONAL SOCIAL SERVICE ORGANISATION,INDIA)


உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சேகரிக்கப்பட்ட TOILET சமாச்சாரங்களைக் கொண்ட இவர் உருவாக்கியுள்ள அருங்காட்சியகம், (toilet-museum) டெல்லியில் உள்ளது.உலகிலேயே இவ்வகையில் பிறிதொன்று இருந்திட வாய்ப்பு இல்லை.

  • http://www.sulabhtoiletmuseum.org/

  • http://development.asia/issue04/default.asp

  • http://sulabhinternational.org/

  • இதே பரிசு, சுனிதா நாராயின் தலைமையில் இயங்கும்-CSE-CENTRE FOR SCIENCE AND ENVIRONMENT-அமைப்பிற்கு, ஆகஸ்டு,2005-ல் கிடைத்து்ள்ளதென்பதும் மகிழ்ச்சிக்குரியதோர் தகவல்.


    WORLD TOILET DAY 19-11-2009.

    0 comments:

    Post a Comment

    Kindly post a comment.