Saturday, November 14, 2009

ஜெர்மனியில் சிவப்புக்கொடி! இந்தியாவில் பச்சைக்கொடி!



அந்நிய நாட்டுத் தம்பதியருக்காக, இந்தியப்பெண் ஒப்பந்தத்தின்பேரில் குழந்தை பெற்றுக் கொடுத்தால் அந்தக் குழந்தை எந்த நாட்டைச் சேர்ந்தது? இந்தியச்சட்டத்தில் சரியான தீர்வு இல்லை.குஜராத் உயர் நீதிமன்றம் அண்மையில் இந்தச்சிக்கலுக்குத் தீர்வு கண்டது.

JANBALAZ-SUSANNE-இவர்கள் ஜெர்மானியத் தம்பதியர். குழந்தைகள் இல்லை.இந்தியா வந்தனர்.MARTHA KHRISTI- என்ற குஜராத் பெண்மணி்யுடன் ஓர் ஒப்பந்தம் செய்தனர்.அந்த வாடகைத் தாய்க்கு சென்ற ஏப்ரலில்,இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. NIKOLAS-LEONARD என்று் பெயர்.அந்தக் குழந்தைகளின் குடியுரிமை கேள்விக்குறியானது. ஜெர்மானிய சட்டதிட்டங்களில் இதற்கு அனுமதி கிடையாது.இந்திய அரசும் கடவுச்சீட்டை-paassport- அனுமதிக்கவில்லை.ஜெர்மானியர் நீதிமன்றத்தின் உதவியை நாடினர்.

இரட்டைக் குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் (வாடகைத் தாய்) இந்தியர்.எனவே இந்தியத் தாய்க்கு இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியாவில் குடியுரிமைபெற உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தனர்.

குஜராத் தலைமை நீதிபதி,கே.எஸ்.இராதா கிருஷ்ணன், நீதிபதி,ஏ.எஸ்.தவே இந்த தீர்ப்பினை வழங்கினர்.பாராட்டத்தக்க மனிதாபிமானத் தீர்ப்பாக அமைந்தது. இத்தகைய வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பே இனி முன்னோடியாகத் திகழும்.

மானுடம் எல்லைகளைக் கடந்தது் என்பது நிரூபணமானது.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" (உறவினர்) என்றுதானே,
நமது புறநானூற்றுப் புலவர், கணியன் பூங்குன்றனார் பாடியுள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.