Saturday, November 28, 2009

நள்ளிரவில் தமிழக மு்தல்வரிடம் கடன் கேட்கப்போன வேலையில்லாப் பட்டதாரி வாலிபன்:




விழுப்பு்ரம் மாவட்டம், கடலூரைச் சேர்ந்தவர், முஹம்மது முபாரஹ். வயது 28. MBA பட்டதாரி. கடலூரிலிருந்து சென்னைக்கு 3 நண்பர்களுடன் சென்ற புதன் இரவு காரில் பயணித்திருக்கின்றான். நள்ளிரவில், தேனாம்பேட்டை வந்தபின், காரை, தமிழக முதல்வர் வீட்டிற்குச் செலுத்துமாறு கூறியுள்ளான். மாட்டிக்கொண்டான், காவலரிடம். விசாரித்தபோது முதல்வரிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்குவதூதான் நோக்கம் என்று கூறியுள்ளான். மருத்துவ அறிக்கை சாதகமாக இல்லாததால், வேலைதேடி துபாய் செல்ல நினைத்த முபாரக்கின் எண்ணம் ஈடேறவில்லை. தேனாம் பேட்டைக் காவல் நிலையத்திலிருந்து ,அவனையும், ஓட்டுநர் உள்ளிட்ட மூவரையும், அவனது தந்தை, ஷாகுல் ஹமீது அழைத்துச் சென்றதுடன் கதை முடிகின்றது. மூ்ளைக்கோளாறு காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர். ஜெயில் அடைப்பு, நீதிமன்றம், வழக்கு விசாரணை, தண்டனை என்றில்லாமல் அப்பாவிடம் ஒப்படைத்திட்ட காவல் துறையினரின் கருணைச் செயலைப் பாரட்டவே இந்தப் பதிவு.

காணவில்லை என்ற விளம்பரம்-விபத்தால் மரணம் என்பது போன்ற செய்திகள் தினந்தோ்றும் பேப்பரில் வந்துகொண்டுதான் இருக்கின்றன். ஆனால், நம் வீட்டில் ஒருவர் காணாமற் போனாலோ- மரணம் அடைந்துவிட்டாலோதான் பாதிக்கப்படுகின்றோம். அங்கொன்று்ம் இங்கொன்றுமாக அதி்ருப்தி அல்லது விரக்தியில் சிலர் இவ்வாறு அலைந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

நியாயமான பல்வேறு முற்சிகளுக்குப் பின்னரும் எண்ணியதை அடைய முடியாமல் போய்விடுகிற- பிரச்சினைகளை எதிர் கொள்ள இயலாத கோழைகளின் செயல் இது. ஆழ் மனதில், தலைவரிடம் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையால் அந்த வாலிபன் நள்ளிரவென்றும் பாராமல் பித்தனாக அலந்திருக்கின்றான். இது போன்ற நபர்க்ளைப் பார்க்க நேர்வோர், சிறிதளவு கவனம் செலுத்தினால், முயற்சி மேற்கொண்டால், மனச் சிதைவின் துவக்கக் கட்டத்திலேயே குணப்ப்டுத்திவிட முடியும். முயற்சிப்போமா? source:TOI

0 comments:

Post a Comment

Kindly post a comment.