விவேகானந்தர் போற்றிய கேரளத்துப் பெரியார்-சமூக சீர்திருத்தவாதி
"கேரளம் பரசுராமர் பார்ப்பனருக்கு்த் தந்த நன்கொடை" என்ற கர்ணபரம்பரைக் கரு்த்திற்கெதிராகப் போர்க்கொடி தூக்கியவர்,சட்டாம்பி ஸ்வாமிகள். சட்டாம்பி என்றால் மானிட்டர் என்று பொருள். சட்டாம்பிள்ளை என்ற சொல் தமிழிலிலும் வ்ழக்கில் உண்டு.
கேரளத்தில் விவேகானந்தர் பயணித்தபோது, இவரிடமிருந்துதான், சின் முத்திரைக்கு உரியதான ஐயப்பாடுகளில் தெளிவடைந்தார்."சிறப்பிற்குரியதோர் மனிதர்" என்று விவேகானந்தரால் பாராட்டப்பட்டவர்,சட்டாம்பி ஸ்வாமிகள்.
உணவும்,தண்ணீரும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்று முழக்கமிட்டவர்,இவர். சமூகத்தின் அடித்தட்டில் இருந்த, ஈழவ மக்களுக்காகப் பாடுபட்டவர்.கேரளத்தில் நிலவிய பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரலெழுப்பிய வகையில், தமிழகப் பெரியாருடன் ஒப்பிடலாம். பார்ப்பனீயர் கேரளத்தில் குடியேறியவர்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
தென்னிந்தியா முழுவதும் பயணித்தார்;மதங்கள், மொழிகள் ஆராய்ந்தார்.பயணத்திற்குப்பின், 1914-ல்,ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தபட்ராசரம்ம் உருவாக்கினார்.ROBIN JEFFRI -என்ற வெளிநாட்டுப் பயணி,சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள், நாராயண குருவிற்கு( மகாத்மா காந்தி சந்தித்த கேரளத்துச் சீர்திருத்தவாதி) யோகாப்பியாசங்க்ளைக் கற்றுக்கொடுத்த விபரத்தைத் தம் எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை வகுப்பறைக்குள் உட்கார அனுமதித்த கொல்லூர் அதியர் மடத்திலிருந்த்தான் இவரது கல்விப் பயணம் தொடர்கின்றது. தைக்காட்டு ஐயா என்ற தமிழறிஞ்ர், ஸ்வாமினாத தேசிகர்,சுப ஜ்டாதிபதிகள் ஆகியோரிடமெல்லாம் பயிற்சி் பெற்ற்வர்.தமிழ்,மலையாளம்,சமஸ்கிருதம் தேர்ச்சி உண்டு.
இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர்,ஐயப்பன்.மக்கள் அழைத்த பெயர்,குஞ்சன். திருவனந்தபுரத்திற்கருகில் உள்ள கன்னன்மூலில் பிறந்தவர். ஆனந்த்சர்மா என்ற வாசுதேவசர்மா-திருனங்கா இவரது பெற்றோர்.
பிரசீனா மலயாளம், வேதாதிகர நிரூபணம்,ஸ்ரீசக்ர பூஜாபலன், க்ர்ஷ்டுமாதா நிரூபணம்,ஜீவகாருண்ய நிரூபணம்,ஆதிபாக்ஷா -இவை இவர் படைத்தளிதவை.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட புற்க்கணிக்கப்பட்டவகளுக்கு்ப் பாடுபட்டவர்கள் எவ்ராக இருப்பினும், பதிவு செய்திட விருப்பம்;http://www.nairs.in/chattambi.htm என்ற வலைத்தளம், NAIR ACADEMY OF INFORMATION RESEARCH AND SERVICES -அமைப்பினரால் உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி இது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி-திராவிட இயக்கங்களுக்கு, மு்ன்னோடியான, பார்ப்பனதல்லதோர் இயக்கத்தி்ன் செயல்பாடுகளுக்குச் சமமாகக் கருதலாம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.