Thursday, November 26, 2009

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்டவர், பெரியாரா? குத்தூசி குருசாமியா?

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். 
 
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."-E.V.R.
23-11-1925-ஆம் நாள், சுய மரியாதை இயக்கம் துவக்கப்பட்டது.துண நின்றவர், S.இராமநாதன்.இருவரது கூட்டு முயற்சியால்தான் , துவங்கியது.ஆனால், இராமநாதனை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறோம்? அதே கதிதான் குத்தூசி குருசாமிக்கும். 

திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 1929-ல்"பெரியார்" பட்டத்தை வழங்கியவர், பேரறிஞர், குத்தூசி குருசாமி. 1928-க்கும் 1935-க்கும் இடைப்பட்ட காலத்திலே, குடியரசு, பகுத்தறிவு, ரிவோல்ட், திராவிடன், மலேயாத் தமிழ் மு்ரசு,புதுவை முரசு ஆகிய பத்திரிக்கைகளில் குருசாமியின் எழுத்துக்கள், கருத்துக்கள் இடம்பெறாத நாளே இருக்காது.அப்படி இருந்தால்,அன்று ஏமாற்றம் அடைந்த மக்கள் ஆயிரம்,ஆயிரம்! குத்தூசி குருசாமி எதை எழுதினாலும், பேசினாலும் அது சுய மரியாதை இயக்கத்தின் கொள்கையாகிவிடும்.
பச்சையப்பன் கல்லூரிக்குள் இந்தியை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் இவரே. அந்தக் குத்தூசி குருசாமிதான்,தமிழ் எழுத்துக்களிலே சீர்திருத்த்ம் வேண்டும் என்று 1929ஆம் ஆண்டு முதலே, தொடர்ந்து எழுதி, வெற்றி கண்டார்.பெரியாரும் அதற்குத் துண நின்றார். 1935ஆம் ஆண்டு முதல் குடி அரசு, விடுதலை, மற்றும் சுய மரியாதை இயக்கத்தால் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தையும், குத்தூசி குருசாமியின் எழுத்துச் சீர்திருத்த முறையில் அச்சிடச் செய்தார்.
ஆனாலும், 1938ஆம் ஆண்டுக்குப்பின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அண்ணாவும், அவரைச் சேர்ந்தவர்களும், எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

1950ஆம் ஆண்டில் "சினிமாவை விடு; சிலம்பைத் தொடு" என்ற முழக்கத்தை மக்களிடையே எழுப்பினார்,குருசாமி. ஆனால், அது, பலரிடம் எடுபடவில்லை. 

இவரது கருத்து எடுபட்டிருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தே மாறியிருக்கும்
அவர் தவறு எனச் சொன்ன கொள்கையே ஆட்சிபீடத்தில் அமர்ந்தது. 

திரு.M.G.R. குருசாமியின்எழுத்துக்களை அரசின்கொள்கையாக ஏற்றுக்கொண்டார். எதனால்? M.G.R.-ரிடம், எழுத்துச் சீர்திருத்ததை ஏற்றுக் கொள்ளச்சொல்லி வற்புறுத்தியவர்கள், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துண வேந்தர், திரு.நெ.து. சுந்தர வடிவேலு, தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர், கொண்டல், சு.மகாதேவன் ஆகி்ய பெரியோர்களாவர்.  

வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்ற ஆசையால் நல்ல செயல்கள் எதிர்பாராமல் நடந்து் விடுகின்றன. தமி்ழ் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அண்ணா பதவியேற்றபோதே இதற்கொரு ஆணை பிறப்பித்திருக்கலாமே

1929 முதல் 1935 வரை தொடர்ந்து பிடிவாதமாக சிறிதுகூடச் சோர்வின்றி, குத்தூசி குருசாமி எழுத்துச் சீர்திருத்ததிற்காகப் போராடி்ய குத்தூசி குருசாமி.அரசு ஏற்றுக்கொண்டபோது உயிருடன் இல்லை. 1965-லேயே இறந்துவிட்டார்.
குத்தூசி குருசாமியின் எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளைப் பாராட்டி பெரியார், தோழர்.சிங்காரவேலர், மற்றும் கைவல்யனார் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தேடி்க்கண்டு பிடிக்கவேண்டும். குத்தூசி குருசாமியின் தமிழ் சீர்திருத்த எழுத்து என்று வரலாறு சொல்லவில்லை. பெரியார் பெயர்தான் ஒட்டிக் கொண்டது.
திருச்சி, துறையூரில் நிகழ்ந்த தஞ்சை-திருச்சி தமிழர் மகாநாட்டில் முதன் முதலில் கொடுக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்தி்ருத்தத் தீர்மானம்.6- வதாகக் காட்டப்பட்டுள்ளது.
" தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் இருப்பதால், புதிதாகத் தமிழ் படிப்பவர்கள் மிகக் கஷ்டப்படுவதால்,அவசியமற்ற பல எழு்த்துக்களை நீக்கி புதிய சப்தங்களுக்காக சில புது எழுத்துக்களயும் சேர்த்து தமிழ் மொழியைத் திருத்தம் செய்யவேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கி்றது."
பிரரேபிப்பவர்: சென்னை(குத்தூசி)எஸ்.குருசாமி B.A.
ஆமோதிப்பவர்: கோயம்பத்தூர் எ.ஆர். சிவானந்தம் - குடி அரசு-31-07-1932.

இதன் பின்னர் பல்வேறு ம்காநாடுகளில்-கூட்டங்களில் குத்தூசியார் எடுத்த முயற்சிகளையும், சந்தித்த பிரச்சினைகளையும் இங்கு விவரிப்பது கடினம். உழைப்பின்பலன் உழைப்பவர்ககளுக்குப் போய்ச் சேராது என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் அனைத்துப்பகுதி மக்களுக்கும்தான் என்பதற்குக் குத்தூசி குருசாமியின் வாழ்க்கை ஓர் உதாரணம். 

குத்தூசி குடும்பத்தார் தி.க., தி.மு.க.;அ.தி.மு.க. ம.தி.மு.க. இன்னுமுள்ள திராவிட இயக்கங்களால் எந்த அளவிற்கு்க் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை எனது தேடல் அட்டவணையில் பட்டியலிட்டுள்ளேன். தெரிந்தவர்கள் பின்னூட்டம் செய்யலாம். 

பாராட்டுக்கும் நன்றிக்கும் உரிய பெரு்ந்தகையோர்:-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் உண்மை வரலாறு-தொகுத்தவர்கள்:
குருவிக்கரம்பை சு.வேலு, கழ்ஞ்சூர் சொ.செல்வராஜி:
வேலூர்சிறுதொழில் பிரிவு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவியுடன்
சென்னை,இராயப்பேட்டை, ஜானி ஜானிகான் தெரு், SRI YESES PRINT HOUSE -அச்சகத்தில் அச்சிட்ட குத்தூசி பதிப்பகத்தார் (1989) 
விலை ரூ.15/-





  • சுயமரியாதை இயக்கம் வலியுறுத்திவந்த தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தை அரசுத் துறையில் நடைமுறைக்கு ஏற்றுக்கொண்ஃடு செயல்படுத்திய மறைந்த புரட்சித்தலைவர் - தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவட்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாளை ( 17-01-1990 ) முன்னிட்டு அவர்களின் நினைவாக இந்நூலை வெளியிடுகிறோம்.

  • குத்தூசி குருசாமி பதிப்பகம்



  • 2 comments:

    1. தமிழ் எழுத்து சீர்திருத்தை கொண்டுவந்தவர் கடலூர் “ஞானியாரடிகள்” ஆவார். இந்த சீர்திருத்தம் சரி என்றுபட்டதாலேயே பெரியாரும், குத்தூசியும் “குடியரசு” இதழ் மூலம் அதை நடைமுறைபடுத்தினார்கள்.

      ReplyDelete
    2. நண்பரே -

      உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
      உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
      என் வலைபூ முகவரி:
      http://eluthuvathukarthick.wordpress.com/

      ReplyDelete

    Kindly post a comment.