1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பு:-
திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரு நகரங்களையும் இணைக்கவேண்டும். இதற்காகத் தாமிரவருணி ஆற்றில் 800 அடி நீளத்தில் ஒரு பாலம் கட்ட வேண்டும். இது அவசரமும் அவசியமும் கூட; இதன் மூலம் குழப்பமும் வன்முறையும் அகலும். திருநெல்வேலி ஜில்லா எல்லா நிலைகளிலும் வளர்ந்து செழிக்கும்.
தாமிரபரணி படகுத்து்றையும் லஞ்சலாவண்யம் -சாதிச் சண்டைகளும்:-
திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும். படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது. படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை.
1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு:
E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார். நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்......சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்.
ஆலோசனைக் கூட்டமும், அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும்:-
கேப்டன் பேபர், W.H. ஹார்ஸ்லி, நமது சுலோசன முதலியார் (தாசில்தார் பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்),கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர். உடனடியாகப் பாலங்க்கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வரைபடம் தயாரானது. 760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது. தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டின.லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது. திட்ட மதிப்பீடு அரை லட்சம். கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர். இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டிவிடும். மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார். பணத்திற்கு என்னசெய்வது? எங்கே போவது ? மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார், கலெக்டர். அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது. மறுநாள் முதல் வசூல் வேட்டையைத் தொடரலாம் என்று ,முடிவாகின்றது.
யார் இந்த சுலோசன முதலியார்? என்ன செய்யப் போகிறார் பண வசூலுக்கு?
திருமணம், தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர். இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள்தான், முதலியாரின் மூதாதையர்கள். கோடீ்ஸ்வரக் குடும்பம். வீட்டில் தங்கக் கட்டிகள் பாள்ம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம். கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம். குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர். நீளமான 'அல்பேகா' கருப்புக் கோட்டு், ஜரிகைத் தலைப்பா, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்கும். மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை. நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார். மனைவி வடிவாம்பாள், "கவலைப்படாதீர்கள்; தூங்குங்கள்; காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என, ஆறுதல் அளிக்கின்றார்.
சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி:-
அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார். வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது.1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்குவதற்குமுன், கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே, இவர் தந்தை, இராமலிங்க முதலியார்தான். பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது . மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி. ஒரே மகன், வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது. என்றெல்லாம் நெஞ்ச்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப்பொழுதைக் கழிக்கின்றார். ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார். அவரது தந்தை "மொழிப்பாலமாக" (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை, 'ஆற்றுப் பாலத்தில்" போட முடிவு செய்கின்றார். கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவா போகி்ன்றார்?
கலெக்டர் தாம்சன், சுலோசன முதலியாரைக் கட்டி்யணைத்த கதை:-
மறுநாள் காலையில், கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார். வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும்,கொஞ்சம் பணத்தையும் "அச்சாரக் காணிக்கை" என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார். கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி. திக்குமுக்காடிப் போகின்றார். வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமற் போகின்றன. மரபுகள் உடைகின்றன. கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து "ஆலிங்கனம்" செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார். பாலத்திருப்பணிக்குக் தனிமனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை. கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார். பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது. விரிவு கண்டு அஞ்சி சிலவற்றை விட்டுவி்டுகின்றேன்.
நன்றி்யோடு நினைவு கூர்வோம். அஞ்சலி செய்வோம்:-
கலெக்டர்கள் R.ஈடன், E.P.தாம்சன்,
லண்டன் வாட்டர்லூ பாலம்போல் வடிவமைத்த நிபு்ணர்,கேப்டன். பேபெர்,
பொறியாளர், ஹார்ஸ்லி்,
கொடைவள்ளல் சுலோசன முதலியார்-வடிவாம்பாள்
ஆகியோரை ஒருநிமிடமேனும் நினத்துப் போற்றுவோம்.
விக்ரம் நடித்த சாமி படத்தில் இந்தப் பாலமும் நடித்திருக்கின்றது. ஆனால், அது1967-ல் விரிவாக்கம் செய்ததையும் உள்ளடக்கியது.
நன்றி:-
சொல்லின் செல்வர் பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது் மாணவரான் குகன் என்கிற தி.அ.சொக்கலிங்கம் அவர்களுக்கும் அதனை 05-12-1993-ல் வெளியிட்ட ஆனந்த விகடன் நிறுவனத்திற்கும்.
காணிக்கை:-
ஒரு பேரியக்கத்தின் பி்ளவில், பிளந்து சென்றவருடன் அணிசேர்ந்தமைக்காகத் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான நிலையில்,பழிக்குப் பழி என்ற நிலை எடுக்காமல் , காவல் நிலையம் கூடச் செல்லாமல், என்னையே வருத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்தபோது, காரணம் என்னவென்று கேட்காமலேயே, எந்த அறிமுகமும் இல்லாத போதும், எக்காரணங்கொண்டும் வேலையை மட்டும் விட்டுவிடாதே என்று வலியுறுத்தியவரும், உலகம் முழுவதும் பயணிப்பவரும், குற்றால அருவியென
தமிழில் எழுத,பேச, (கவிதையானாலும், கட்டுரையானாலும்),தமிழகத் தகவல் கள்ஞ்சியமும், தமிழகத்தின் தலைமைப்பொ்றுப்பை ஏற்றிடத் தகுதியுள்ளவர்களில் ஒருவரும், உடனிருப்போர் ஒத்துழைப்பின்மையால் MLA -வாகக் கூட முடியாமற் போனவரும், மெய்யான மனிதாபிமானியும், சுலோசன முதலியார் பாலமுள்ள மாவட்டத்திலேயே வாழ்பவருமான தமிழ்ப் பேராசனுக்குப் பணிவான காணிக்கை.(என்னை நேரில் பார்த்தால் ஒருவேளை அவருக்கு என் நினைவு வரக்கூடும்)

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வாரிகொடுத்த வள்ளல்கள் ஏராளம். அவர்கள் அரசு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவரை சுலோசன முதலியார் போன்ற அரசு அதிகாரிகள் மக்களுக்காக உழைத்தனர்.
ReplyDeleteஇன்று அந்த பாலம் கட்டினால் நமக்கு எத்தனை விகிதம் தரகுக்கூலி (கமிஷன்) கிடைக்கும் என நாக்கை தொங்கப்போடும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமே நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.
உழைப்பையும் தியாகத்தையும் மதிக்காத சமூதாயம் ஒருபோதும் உருப்படாது.
மக்களுக்காக உழைத்த அந்த உள்ளங்களை நாம் நன்றியோடு நினைவுகூர்வோம்.
உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. உங்கள் பணிதொடர வாழ்த்துகள்.
சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஅறியாத விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.
மிக்க நன்றி!
பாரட்ட வேண்டிய பண்பு, படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது..
ReplyDeleteஇந்த நிகழ்வை தேடி எடுத்து இடுகையாக இட்ட தங்களை வாழ்த்துகிறேன்..
நிஜமாவே ரொம்ப ரொம்ப அருமையான பகிர்வு.
ReplyDeleteமிக மிக, சுவாரஸ்யமாக, சுருக்கமாக எழுதுகிறீர்கள். தொடர்க உங்கள் அரும்பணி.
வலைப்பூ தொடங்கி ஒரு மாசத்துக்குள்ளயே 1000- த்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களா? கலக்குறீங்க வாத்யாரே.
வாழ்துக்கள்.
unmaiyiley ithu oru nalla pathivu sulochana muthaliyarin padam ondrai ingaey thanthrukalam.
ReplyDeletesulochana mudaliar udaya eegai kunam periyar dam katta thanathu selvatthai ellam vazhangiya english enginear benny quick avrkalin sathanaiyai ninaivu paduththukirathu
ReplyDeletesuch small real life stories need to be documented extensively to rediscover our roots and personal values
ReplyDelete