புகையும் பகையும்-கண்ணதாசன்-புள்ளிவிபரங்களால் என்ன பயன்?
கண்ணதாசனின் பாடல் -7-வது தொகுதி-பக்கம் 275-276.
இழு்க்க இழுக்கவரும் இன்பம் -புகை
இறுதியில் தரும் துன்பம்
ஒழுக்கத்தை நான் சொல்லவில்லை-உடல்
உருப்பட ஓர் வழி சொல்வேன்!
உதிரத்தின் அணுக்களைக் கெடுக்கும்-பிள்ளை
உடல்வலு வில்லாமல் பிறக்கும்
இதயத்தின் துடிப்பினைப் பெருக்கும்-புகை
இளமையில் மரணத்தில் முடிக்கும்!
பிடிக்கின்ற கைகளைப் பாரு-அதில்
பெருமளவில் ஒரு கோடு
நிறத்தினில் மஞ்சள் காட்டும்-அந்த
நிறம்தான் உட்புறம் வாட்டும்!
படிப்பதில் இல்லாத சுகமா-நல்ல
பழக்கத்தில் இல்லாத சுகமா
கெடுக்கின்ற பொருள்களில் சுகத்தை-நீ
கேட்பதும் பிடிப்பதும் தகுமா?
புகைபிடிக் கின்றவன் இதழை-இளம்
பூவையர் விரும்பு வதில்லை
பகைவரில் பெரியது புகையே-அதை
பார்ப்பதும் உடம்புக்குப் பகையே.
உலகில் மூன்றில் இரண்டு பங்கு புகைப்பழக்கம் சீனா,இந்தியா,ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளிலேதான் உள்ளது.20ஆம் நூற்றாண்டு 10 கோடி்உயிர்களை புகையிலைக்கு்க் காவு கொடுத்திருக்கின்றது.
சிகரெட்டுக்கு 32.7 சதவிகித ஆண்கள்; 1.4 சதவிகிதப் பெண்கள்; புகையிலைக்கு 57 சதவிகித ஆண்கள் இந்தியாவில் அடிமையாகி உள்ளனர்.
புகையிலை விற்பனையால் அரசுக்கு வரும் ஆண்டு வருமானம் 7.8 கோடி.
புகையிலைப் பழக்கத்தால் வரும் நோய்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவு 30.9 கோடி.
தமிழக மாணவர்கள் 7 சதவிகிதம் புகையிலைக்கும், 2 சதவிகிதம் சிகரெட்டுக்கும் அடிமையாகி உள்ளனர்.
பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களிடம் நபருக்கு 200 ரூபாய் வீதம் தமிழகத்தில் வசூலான தொகை,ரூபாய்,17,98,500/-சென்னையில் மட்டும்1,15,750/-
கல்விக்கூடங்களிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்களை விற்பதும், குடோன்களில் வைத்திருப்பதும் கூடாது. பறிமுதல் செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி துப்புரவாளர்களுக்காக (???) புகையிலைத் தடுப்பு குறித்த கூட்டத்தில் டாக்டர் இளங்கோ அள்ளி வீசிய, புள்ளி விபரங்கள்.
அடுத்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் அதற்குப் பின்னாலும் கருத்தரங்கங்கள் தொடர்கதையாகும். ஊடகங்களும் வெளிப்படுத்தும். செலவு கணக்கும் எழுதப்படும்.அதிகாரிகளின் சுய கணிப்பீட்டூக் குறிப்புக்களில் சாதனைகளாகக் காட்ட மட்டுமே பயன்படும் இச்செயல்பாடுகளால் வேறு என்ன பயன்? தெரிந்தோர் சொல்லுங்களேன்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.