திண்டுக்கல் நண்பர் கௌதம் சொன்ன குட்டிக் கதை!
ஐந்து தவளைகள் / எப்படி? எதற்கு? ஏன்? 1
இரை தேடி நீர்ப்பரப்பை விட்டு வெளியேறின ஐந்து தவளைகள். வெயிலுக்கு வந்து வெகுநேரமானதால் தோல் வறண்டுபோய், அவஸ்தைப்பட ஆரம்பித்தன.
வழியில் ஒரு ஆழமான கிணறு எதிர்ப்பட்டது. உடலை ஈரப்படுத்திக் கொள்வதற்காக கிணற்றுக்குள் குதித்து, கொஞ்ச நேரம் நீச்சலடிக்க முடிவு செய்தன தவளைகள் ஐந்தும்.
எதிரே இருந்த மணிக்கூண்டு கடிகாரத்தில் பத்து மணிகள் அடித்ததும் கிணற்றுக்குள் பாய்வதாகத் திட்டம். தயார் நிலையில் தவளைகள் காத்திருக்க... கடிகாரத்தில் பத்து மணிகள் ஒலித்து ஓய்ந்தன.
மறுநிமிடம் கிணற்றுக்குள் எத்தனை தவளைகள் நீச்சலடிக்கும்?
?
?
?
?
?
திட்டமிட்டபடி கிணற்றுக்குள் குதித்த இரண்டு தவளைகள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்தன. எஞ்சியிருந்த மூன்று தவளைகளும் கிணற்றின் ஆழம் காரணமாக கடைசி விநாடியில் தயங்கியதால் சுவரிலேயே 'தேமே' என உட்கார்ந்திருந்தன!
முடிவெடுப்பதால் மட்டுமே கிடைத்துவிடாது வெற்றி. முடிவுகளின்படி முயற்சி செய்பவர்களே ஜெயிக்கிறார்கள்!
நண்பரே -
ReplyDeleteஉங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/