இடித்துரைக்கும் தமிழறிஞர் எவருமே இல்லையா?
உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்படும். அவற்றுள் சிறந்தவை தேர்வு செய்யப்படும். அவை தொகுக்கப்பட்டு ஆய்வுமலராக்கப்படும். அடுத்து நடக்கும் மாநாட்டில் ஆய்வு மலர் வெளியிடப்படும்.இஃது வழக்கமான நடைமுறை.
ஜனவரி, 1-5, 1995-ல் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. 351 தமிழறிஞர் கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டன.5 தொகுதிகளாக வெளியிட முடிவானது. முடிவு செய்தது மூவர் குழு. உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் நெபுரு குரோசிமா, தஞ்சை மாநாட்டு அமைப்புச் செயலர் ராஜாராம், பேராசிரியர் இ.அண்ணாமலை ஆகியோரே அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
2004-வரை ஆய்வுமலர் அச்சிடப்படவில்லை. தலைவர் நெபுரு குரோசிமா ஆய்வுமலரை வெளியிடுமாறு தமிழக அரசுக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். 5199 பக்கங்களக்கொண்ட 5 தொகுதிகள் தஞ்சையில் அச்சிடப்பட்டன. மொத்தவிலை 3000-ம் ரூபாய் என்றும் முடிவுசெய்யப்பட்டது.இன்றுவரை அவை வெளியிடப்படவே இல்லை. தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டதுதான் மிச்சம். அந்த 1000-ம் பிரதிகள் தரமணி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன்.
மீள்பார்வை இருந்தால்தானே தொடர்ந்து பயணிக்க முடியும்?தூங்கிக் கொண்டிருக்கும் 351 தமிழறிஞர் ஆய்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எப்போது? முதல் மாநாடோ, ஒன்பதாவது மாநாடோ அதற்குமுன்பே இதற்கொரு முடிவு செய்வதுதானே நியாயம்?
தினமணி 12-11-2009 -ஆம் நாள் ஆய்வு மலர் வெளிவருமா, வராதா என்று வினா எழுப்பியுள்ளது. அதுசரி, இந்த 14-ஆண்டுகள், நெபுரு குரோசிமாவைத்தவிர வேறு எவருக்குமே அக்கறை இல்லையா? தமிழ் செய்தித்தாள்கள்-ஊடகங்கள் கூட இதனைக் கண்டித்திருக்கலாமே?
கோடிக்கணக்கில் பணஞ்செலவிட்டு மாநாடு நடத்தியபின், வெளியிடப்டப்படும் ஆய்வு மலர்களின் எண்ணி்க்கை 1000-ம் மட்டும்தானா? அவர்களது இலவசப் பரிமாறுதல்களுக்கே போதாதே! தமிழ் நாட்டில் உள்ள நூலகங்களில்கூட அவை இடம்பெறாதா? உலகம் முழுவதும் எப்படிச் செல்லும்? அத்தனை அறிஞர்கள் முயற்சிகளும் அவர்களுக்கு மட்டும்தான் என்றால், இவ்வளவு ஆரவாரம் எதற்காக?
//கோடிக்கணக்கில் பணஞ்செலவிட்டு மாநாடு நடத்தியபின், வெளியிடப்டப்படும் ஆய்வு மலர்களின் எண்ணி்க்கை 1000-ம் மட்டும்தானா? அவர்களது இலவசப் பரிமாறுதல்களுக்கே போதாதே! தமிழ் நாட்டில் உள்ள நூலகங்களில்கூட அவை இடம்பெறாதா? உலகம் முழுவதும் எப்படிச் செல்லும்? அத்தனை அறிஞர்கள் முயற்சிகளும் அவர்களுக்கு மட்டும்தான் என்றால், இவ்வளவு ஆரவாரம் எதற்காக?//
ReplyDeleteஎன்ன சொல்வது? பொறுத்திருந்து பார்க்கலாம். வேறொன்றும் செய்வதற்கில்லை
-ப்ரியமுடன்
சேரல்