கௌதம புத்தர்-அன்று சொன்னது-அர்த்தம் உள்ளது
ஒருநேரம் சரி்யாகத் தோன்றுவது் பிறிதொரு நேரம் தப்பாகத் தோன்றும்.
ஒருநேரம் தப்பாகத் தோன்றுவது பிறிதொரு நேரம் சரியாகத் தோன்றும்.
என்றுமே சரியாகத் தோன்றுவனவற்றின்படி வாழ்ந்து பழகிவிட்டாலும் வாழ்க்கை ருசிக்காது.
அருந்தலும் பொருந்தலும் அளவோடிருநதால் ஆயுட்காலம் நோயின்றி வழலாம்.
"பராபவ சுத்தங்" என்பது பாலிமொழி உச்சரிப்பு; வீழ்ச்சிக்கான காரணங்கள்-என்று பொருள்.
சீடன் கேட்க, குரு பதில் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது.
புத்தரின் போதனைகளில் ஒன்று.
தாடியும் மீசையுமாக அலைந்த ஓர் மழை நாளில்,ஒதுங்கிய இடம் எழும்பூர், கென்னட் லேனில் உள்ள மஹாபோதி சங்கம்.
கேட்டு வாங்கிய சிறு புத்தகம். தமிழ்-பாலிமொழி உச்சரிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.(இலவசம்)
புத்தர் அளித்திட்ட பதில்கள் மட்டும் பின்வருமாறு: எல்லா மதத்தலைவர்களின் மையக் கருத்தும் ஒன்றாகவே இருக்கும்.
இதுவும் அப்படித்தான்!
1. தர்மத்தை விரும்புபவர்கள் வெற்றி அடைவர்; வெறுப்போர் வீழ்ச்சி அடைவர்.
2. தர்மத்தை வெறுப்பவர்கள் தீயவற்றை ஏற்றுக்கொள்வர்;எனவே, வீழ்ச்சி அடைவர்.
3. சோம்பலும், கோபமும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
4. பெற்றோரைப் பேணிக்காப்பாற்றாததும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
5. பொய் சொல்லி நல்லவர்களை ஏமாற்றுவதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
6. போகப் பொருட்களைத் தனியே அனுபவிப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
7. பிறப்பாலும், செல்வத்தாலும்,குலத்தாலும் பெருமை அடைவதும், தன் சுற்றத்தை வெறுப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
8. விபச்சாரம்,குடிபழக்கம்,சூதாட்டம் போன்ற பழக்கவழக்கங்கள்கொண்டிருத்தலும், வருமானத்தை வீண் செலவு செய்வதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
9. மனவியிடம் திருப்தியடையாமல் விபச்சாரிகளிடமோ,மாற்றான் மனைவியிடமோ செல்வதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
10. முதுமைக்காலத்தில இளம் பெண்ணத் திருமணம் செய்துகொள்வதும்,அந்தப்பெணணின் மீதுகொண்ட ஆசையால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் விழித்திருப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
11. குடிப்பழக்கம் மற்றும் வீண் செலவு செய்யும் ஆண் அல்லது பெண்ணிடம் வீட்டு நிர்வாகப் பொறுப்பு இருப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.
12. இராஜ குடும்பத்தில் பிறந்தத ஒருவர் அதிக ஆசையும், அற்ப செல்வமும் உடையவனாக இருந்தும், பேராசையும் சுயநலமும் கொள்வானாகில், அதுவும் வீழ்ச்சிக்கொருகாரணம்.
போதிமரத்தடி ஞானம் போகுங்காலத்தில் வந்தால யாருக்கு என்ன லாபம்?
ஆயிரக்கணக்கில்/லட்சக்கணக்கில் வருவாய் வரும்பொழுது ஆடாதஆட்டம்
ஆடிவிட்டுப் பின் பழங்கதை பேசி என்ன பயன்?
மஹாபோதி சங்கப் பொறு்ப்பாளருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
0 comments:
Post a Comment
Kindly post a comment.