NEHRU-EDWINA MOUNTBATTEN -இப்பொழுது என்ன அவசியம் வந்தது?
INDIAN SUMMER-என்ற ஹாலிவுட் திரைப்படம் ,JOE WRIGHT- என்பவர் இயக்கத் திட்டமிட்டார்.
இந்தியாவில் படப்பிடிப்பு; முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசு. நாயகன்-நாயகி இணைந்து
நடிக்கும் காட்சிகள் கூடாதென்றது.கையெழுத்துப் பிரதி வேண்டும் என்றது.மாற்றிக்காட்டினால்
பார்க்கலாம் என்கிறது. என்ன விஷயம் என்று பார்த்தால்,படத்தில் உள்ளவர்களின்
சர்ச்சைக்குரிய நட்பைச் சுற்றி வருகின்றது, கதை.
பிரிட்டிஷ்காரர்,ALEX VON THUNZELMANN-என்பவர், எழுதிய புத்தகம்,"INDIAN SUMMER, THE HISTORY OF THE END OF AN EMPIRE".இதுவே அந்தப் படத்திற்கான கதைக்கு அடித்தளம்.
74-வயது ப்ரெஞ்சு எழுத்தாளர்; பெண்ணுரிமைப் போராளி.1983-லிருந்து ஆண்டுதோறும்
இந்தியா வந்து செல்பவர்.ஹரியானாவில் உள்ள நந்தன் என்ற சிறு கிராமத்திற்கு.இந்தியா
குறித்துத்தாம் எழுதிய 3 புத்தகங்களை விரைவில் வெளியிடப் போகின்றார். 1983-ல்
அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர்,"EDWINA AND NEHRU" "இண்டியன் சம்மருக்கு" இந்திய அரசு தடை விதிப்பது வியப்பளிப்பதாகப் பகிரங்கப் பேட்டி தருகின்றார்.NEHRU-EDWINA படத்துடன் செய்தி, பத்திரிக்கைகளில்!
9நவம்பர்,2009டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழிலும் பிரசுரமாகியுள்ளது.இப்பொழுது
தடுத்திடும் மத்திய அரசு முன்பே எதிர்ப்போ/தடையோ சொன்னது உண்டா தெரிந்துகொள்ள ஆசை.தெரிந்தோர் சொன்னால் மிகவும் நன்றி.
PAMELA HICKS -எட்வினா மௌன்ட்பாட்டனின் இளைய மகள்.அளித்துள்ள பேட்டிகளை
இங்கே சென்றால் பார்க்கலாம்.
www.thehindu.com/2007/07/18/stories/2007071862131300.htm
இங்கும் சில செய்திகள் உண்டு.
http://ibnlive.in.com/news/edwinanehru-affair-got-kashmir-deal-done/45181-3.html
இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிக்கையாளர், அந்தக்காலத்தில் எடுத்துள்ள அரிய புகைப்படங்களை இங்குசென்றால் பார்க்கலாம்.
http://forum.santabanta.com/showthread.htm?t=157989
அலமாரியில் தூங்கிய புத்தகத்தைத் தூசிதட்டித் தேடியெடுத்துத் திரைப்படமெடுக்க
ஹாலிவுட் இயக்குநருக்கு இப்பொழுதென்ன அவசியம் வந்தது?
முயற்சியே ரத்து/ஒத்திவைப்பு என்பதே கடைசித் தகவல்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.