தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்போம்
லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எச்சூழலிலும் தடுப்போம்; தவிர்ப்போம்.
ஊழலின் ஊறுக்கண்ணை வேரறுப்போம்.
தாய் தந்தையை கண்போல் காப்போம்.
இயற்கை வளைத்தைக் காப்போம்.
இயற்கையோடு இணந்து வாழ்வோம்.
நலிந்தோரின் நலன் காக்கப் பாடுபடுவோம்.
உழவுக்கும் உழவுத்தொழிலுக்கும் ஊன்றூகோலாகவும் ஊறுதுணையாகவும் இருப்போம்.
நெசவுத் தொழிலை நெறிபடுத்துவோம்.
மகளிரது உரிமைகளையும்
www.makkalpathai.orgஉணர்வுகளையும் மங்காத வெளிப்பென மதிப்பளிப்போம்.
மாற்றுத் திற்னாளிகளுக்கும் மூன்றாம் பாலினத்தினருக்கும் ஏற்றமிகு வாழ்க்கைக்கு உறுதி செய்வோம்.
சாதி மத சான்றுகளைக் கடந்து சாதிக்கும் சக்தியாய் சங்கமிப்போம்.
100 சதவிகிதம் நேர்மையாகவும் கண்னிமையாகவும் வாக்களிப்போம்.
இந்த உறுதி மொழிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து, சிறந்த சமூகத்தையும், அதன்மூலம் சிறந்த அரசியலையும் கொண்டு வருவோம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.