Tuesday, May 2, 2017

சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும்,

இறையரசன்
Attachments13:35 (21 hours ago)

to Daily, bcc: me
Tamil
English   Translate message
Turn off for: Tamil
--
அன்பார்ந்தீர்! வணக்கம்.!

 வணக்கம்,


இரண்டாம் உலகப்போர் காலத்தில் (1940 களில்) தமிழக, சிங்கப்பூர், மலையக, பர்மியத் தமிழர்கள் கட்டிய சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும், அப்போது நிகழ்ந்த காதல் கதையையும் இணைத்துத் பிரமாண்டமான திரைப்படமாக தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் இந்திய விடுதலை வரலாற்றையும், உலகப் போர்ச்சூழலையும், தமிழர்கள், நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள், பர்மியர்கள் உள்ளிட்ட தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கையைக் கதைக் களமாக, வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு தமிழ். சீனம், ஜப்பான், ஆங்கிலம், இந்தி, பர்மிய, இந்தோனேசிய மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இயக்குநர் யார் கண்ணன் இயக்கத்தில் உருவாக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்பட உருவாக்கத்தில் இணைய விரும்பும் பன்னாட்டுத் திரைப்பட கலைஞர்கள், முதலீட்டாளர்கள், வரலாற்று விற்பன்னர்கள், உலகத்தமிழர் அமைப்புகள் இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்ற, பங்குபெற வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தென்கிழக்காசியத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்க இருக்கும் இத்திரைப்படத்தில் மேலும் பல்வேறு அமைப்புகள் தயாரிப்பில் இணைய இருக்கின்றதாக அறிவித்திருக்கிறார்கள். 

 தொடக்க விழா சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று முகப்பேர் மருதம் அடுக்கக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் முனைவர் இறையரசன், இயக்குநர், நடிகர் யார் கண்ணன், உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் ஜெயதேவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இத்திரைப்படம் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 044 - 26203050, 9840416727 என்ற எண்களிலும், iraiarasan@gmail.com, yaarkannan@gmail.com, jayadavan@gmaial.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.