Thursday, April 20, 2017

குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம்: பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன்




இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் வரவழைத்தது. அவரிடம், குல்பூஷண் ஜாதவ் நிரபராதி, அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குல்பூஷண் ஜாதவை தூதரகரீதியாக சந்தித்து பேசுவதற்கு அனுமதிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்தனர். 

நன்றி :மாலைமலர்


0 comments:

Post a Comment

Kindly post a comment.