Friday, April 21, 2017

தலாய் லாமா வருகை சர்ச்சை- அருணாசல பிரதேசத்தின் 6 மாவட்டப்பெயர்களை மாற்றியது சீனா!


கோப்புப் படம்

நன்றி :_ பி/பி.சி. செய்திகள்

தலாய் லாமா இந்தியாவில் விஜயம் மேற்கொண்டதற்கு "பதிலடி கொடுக்கும்" விதத்தில் இமாலய எல்லைப் பகுதிகளில் இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்திற்கு, 81 வயது திபத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா விஜயம் செய்தார்.

தலாய் லாமாவின் விஜயம் இருதரப்பு உறவுகளிலும் "எதிர்மறையான விளைவுகளை" ஏற்படுத்துவதாகவும், சீனாவின் விருப்பதை இந்தியா நிராகரிப்பதாக போல் உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

செவ்வாய்க்கிழமையன்று சீனா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், தலாய் லாமாவின் வருகை முற்றிலும் மத ரீதியானது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது அருணாச்சல பிரதேசிற்கான தலாய் லாமாவின் முதல் விஜயம் அல்ல; அவர் ஏற்கனவே 1983, 1997, 2003-ல் இரண்டு முறை மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு திபத்தில் சீனாவிற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இந்திய கட்டுப்பாட்டிற்குள்ள சில பகுதிகளில் உள்ள ஆறு இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது என சீன அரசு ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

அருணாச்சல பிரதேசத்திற்கான தனது விஜயத்தை தலாய் லாமா, நிறைவு செய்த அடுத்த நாளின் தேதி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்ள பிராந்தியங்களில் அதிகாரபூர்வ பெயர்களை சீனா மாற்றுவது இதுவே 

இதற்கு முன்னதாக, திபத் சீனாவிற்கு உட்பட்டது என்ற இந்தியாவின் நிலையில் மாறுதல் இல்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்திருந்தார்.

இது குறித்த பிற 

அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா வருவதற்கு சீனா எதிர்ப்பு

தன்னைக் காப்பாற்றிய சிப்பாயை 60 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார் தலாய் லாமா

இந்தியக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் தலாய் லாமா - சீனா கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
தொடர்புடைய தலைப்புகள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.