Saturday, November 12, 2016

தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை, !



தாமிரபரணி...
காவிரி, தென்பெண்ணை, பாலாறு போன்ற நதிகள் பிறமாநில இடையூறால் காய்ந்து அடையாளம் இழந்துவரும் வேளையில், மீதமிருக்கும் தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளும் மணல்கொள்ளை, ஆக்கிரமிப்பு காரணமாக சாக்கடைக் கால்வாய்களாகி விட்டன. தென்தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி 3150 குளங்களை நிறைய வைக்கிறது. பலலட்சம் விவசாயிகள் இதை நம்பி வாழ்கிறார்கள். இந்த நதியை மீட்டு, மீண்டும் பொலிவூட்டுவதற்காக ‘தமிழ்அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்கள். அது தொடர்பாக விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ள ஆடியோ சிடிதான் இது. நெல்லை ஜெயந்தாவின் ஈர வரிகளில் தாமிரபரணிக்கும், தமிழர்களுக்கும் உள்ள நேசம் இழையோடுகிறது. அரவிந்த் சித்தார்த்தாவின் இசை, வரிகளை சிதைக்காமல் இதயத்தைத் தாலாட்டுகிறது.

(விலை ரூ.25/-, வெளியீடு: தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை, 5/24, மெயின்ரோடு, காயாமொழி-628205, பேச: 9443069003)

 நன்றி :- http://www.kungumam.co.in


0 comments:

Post a Comment

Kindly post a comment.