Sunday, November 6, 2016

"கவிஞர் கிச்சன்' என்ற பெயரில் துரித உணவகம் சினிமா பாடலாசிரியர் !





திரைத்துறை வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்டவர் ஜெயங்கொண்டான். கே.கே.நகர் காமராஜர் சாலையில் "கவிஞர் கிச்சன்' என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வரும் இவர், சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் இளைஞர்களுக்கு வேலை, தங்குமிடம் என நம்பிக்கை தருபவர். ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ள இவர், தற்போது நடிகராகவும் வெளிப்பட்டுள்ளார்.

 "பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்துக் கொண்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.  இதுதான் என் அனுபவம், ஞானம் எல்லாம். கொஞ்சம் கவிதை... சில நூறு ரூபாய் பணத்தோடு சென்னைக்கு வந்தேன்.  எங்கே தங்கப் போகிறோம், எங்கே சாப்பிட போகிறோம் என்று தெரியாது. இலக்குகளை அடைய, வறுமையை ஒழித்து விடு எனும் வைரமுத்துவின் வரிகள்தான் என்னை பயணப்பட வைத்தது. சின்ன சின்ன வேலைகள் பார்த்தேன். இரவு ஹோட்டல்களில் சப்ளையராக இருந்தேன். அந்த அனுபவத்துடன் "கவிஞர் கிச்சன்' என்ற துரித உணவகத்தை ஆரம்பித்தேன். பசியை ஜெயித்தவுடன் இலக்குகளை அடைவதற்கு தயாரானேன். 

இப்போது பாடலாசிரியர், நடிகர் என என் எல்லைகள் விரிந்திருக்கின்றன. "றெக்க' படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனேன். பார்த்திபன் இயக்கும் "கோடிட்ட இடத்தை நிரப்புக', கண்ணன் இயக்கும் "இவன் தந்திரன்', கார்த்தி இயக்கத்தில் "அழகு', சிவா இயக்கும் "நட்புன்னா என்னென்னு தெரியுமா', ஸ்ரீதர் இயக்கும் "கவலைப்படாத காதலர் சங்கம்' ஆகிய படங்களில் நடிக்கிறேன்'' என்கிறார் ஜெயங்கொண்டான்.  

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.