Sunday, November 6, 2016

புது டெல்லியில் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் MobileSparks 2016,





’MobileSparks 2016’- நீங்கள் கலந்து கொள்வதற்கான 8 முக்கிய காரணங்கள்!  

இந்தியாவில் 100 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். 2020க்குள் இதில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களுக்கு மாறிவிடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

* 60% இந்திய பயணாளிகள் தங்களின் மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துகின்றனர். 

* 2016 க்குள் 7.7 பில்லியன் இந்திய மக்கள் ஆப் பதிவிறக்கங்கள் செய்து, உலகின் நான்காவது பெரிய ஆப் நாடாகி விடும். 


இந்தியாவில் மொபைல்போன் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்திலும் இது தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் இனி வெறும் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய சாதனம் இல்லாமல் மக்களின் அன்றாட தேவைகள் அனைத்துக்கும் பயன்படுத்தக்கூடியதாக ஆகி வருகிறது. ஏடிஎம், டாக்சி புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், என்று எதை எடுத்தாலும் இனி மொபைல் ஆப் மூலமே நடைபெறுகிறது. இந்த மொபைல் துறை வளர்ச்சி, தொழில்முனைவர்களை அத்துறையில் கால்பதிக்க வழி செய்துள்ளது. 

யுவர்ஸ்டோரி நடத்தும் வருடாந்திர நிகழ்வு ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ MobileSparks, இந்தியாவில் மொபைல் துறை தொடர்பான ஸ்டார்ட்-அப், தொழில்முனைவோர்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்களின் தயாரிப்பை, சேவையை மற்றும் கண்டுபிடிப்புகளை வெளியிட உதவும் ஒரு மாபொரும் தளமாகும். 6 ஆவது பதிப்பான இந்த ஆண்டு ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ தற்போதுள்ள சந்தை வாய்ப்புகள், தேவைகள் மற்றும் சேவைகள் குறித்து அறிவதற்கான அரிய வாய்ப்பை அளிக்கும். 

MobileSparks நிகழ்வில் நீங்கள் கலந்துகொள்வதற்கான 8 முக்கிய காரணிகள்:

வல்லுனர்களின் பேச்சை கேளுங்கள்: மொபைல் துறை வல்லுனர்கள் பகிர உள்ள அத்துறை பற்றிய இன்றைய சூழலை அறிந்து கொள்ளுங்கள். நாங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள துறை வல்லுனர்கள், அரசுத்துறை அதிகாரிகள், முதலீட்டாளர்கள் தங்களின் கருத்துக்களை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளோம். ‘டிண்டர்’ இந்திய தலைவர் தரு கபூர், தகவல் தொடர்புத்துறை இணை செயலாளர் ராஜீவ் பன்சல், ‘மேக்மைட்ரிப்’ சிஇஒ, தீப் கால்ரா, ‘ஹெல்ப்சாட்’ நிறுவனர் அன்குர் சிங்க்லா என்று பலர் இதில் உரையாற்ற உள்ளனர். 

கற்றுக்கொள்ளுங்கள், கண்டறியுங்கள்: பல தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் குழு விவாதங்கள், வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டு கற்றுக்கொள்ளுங்கள். உலக அளவில் வெற்றி அடையுங்கள். 

தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்: உங்களுக்கு உதவக்கூடிய சரியான நபர்களை சந்தித்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொடர்பை உருவாக்க இதைவிட உங்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்காது. வெற்றி, தோல்விகளை சந்தித்த துறை வல்லுனர்களின் கருத்துக்களும் அனுபவங்களும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். 

MobileSparks நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: எல்லா ஆண்டையும் போல் இந்த ஆண்டிற்கான மொபைல் துறையில் பிரகாசிக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாடி பயன்பெறுங்கள். அவர்களின் வெற்றிப்பாதையை அறிந்திடுங்கள்.

இந்திய வாய்ப்புகளை உங்களதாக்குங்கள்: இந்திய அரசின் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ போன்றவை வழங்கும் வாய்ப்புகள், மொபைல் துறை வளர்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

புதிய தயாரிப்புகளின் வெளியீடு மற்றும் செயல்பாடுகளை காணுங்கள்: ஸ்டார்ட்-அப் மற்றும் மொபைல் டெவலப்பர்களின் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்த ஏதுவான நிகழ்வாகும் மொபைல்ஸ்பார்க்ஸ். மொபைல் துறை வல்லுனர்களுக்கு முன்பு உங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி பிரபலப்படுத்துங்கள். 

கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுங்கள்: துறை வல்லுனர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையை பெறுங்கள். இவர்களின் அறிவுரைகள் உங்களுக்கு அத்தியாவசியமானதாகும். உங்களின் தயாரிப்பை பற்றிய சரியான கருத்து, அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி கேட்டு நடக்கலாம். 

புது டெல்லியில் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் MobileSparks 2016, மொபைல் ஸ்பார்க்ஸ் நிகழ்வில் கலந்து கொள்ள MS16CTA40 என்ற கோடை பயன்படுத்தி 40% தள்ளுபடியை பெறுங்கள். 

 Thanks : https://tamil.yourstory.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.