குவைத் எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த ஒரு அமைப்பான'தமிழ்நாடு பொறியியல் குழுமம்' சால்மியா எனும் நகரிலுள்ள "தி ரேடிசன் ப்ளு" உயர்தர நட்சத்திர விடுதியில்02.11.2016 அன்று 'குவைத் எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி (CEO of KPC) யின் முன்னிலையில் மிக விமரிசையாக ஒரு நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது.
உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம்.
அதற்கிடையே எங்களின் துரித கால API தர மேலான்மைச் சான்றிதழை பெற்றமைக்கும், தரக் கட்டுப்பாடு மற்றும் தரநிர்ணயத் துறை மேம்பாட்டு வளத்தையும் பாராட்டி எங்களின் KOMC நிறுவனத்திற்கு சாதனை விருதினைத் தந்து மதிப்பு கூட்டியது இந்த த.பொ. குழுமம்.
நமது மதிப்பிற்குரிய ஐயா மூத்த பொறியாளர் திரு. செந்தமிழ் அரசு, அறிவியல் அறிஞர் முனைவர் .திரு. நீலமணி, கடலாராய்ச்சி துறை முனைவர் திரு. குமார், பல்கலைகழக உயர் பேராசிரியர் திரு. பால் மனுவேல், மூத்த பொறியாளர் திரு. நடராசன் ஐயா போன்றோர் இருக்கும் சபையில் எங்களின் நிறுவனத்திற்காக நான் விருது பெற்றதும் பெருமையாகவே இருந்தது.
த. பொ. குழும தலைவர் திரு. ஜெயக்குமார் மற்றும் செயலாளர் திரு. ஷான் செந்தில் இருவரும் மிகச் சிறப்பாக வரவேற்புரை வழங்கி விழாவினை துவக்கிவைத்தனர். பொறியாளர் திரு. ஜெம் பிரசன்னா மற்றும் சகோதரியும் சேர்ந்து மிக தரமாக நேர்த்தியாக விழாவினை தொகுத்து வழங்கினர். முன்னிலையில் பெயர் சொல்லிக்கொண்டே போகத்தக்க பல முன்னாள் பொறுப்பாளர்களும் பொறியாளர்களும் எண்ணெய் வாயு சார்ந்த குவைத்திய மேலாளர்களும் கலந்துக்கொண்டு பெருமைச் சேர்க்க, விழா தாய்மண்ணே வணக்கம் பாடலோடு நிறைவுற்றது..
வித்யாசாகராக இதுவரை வாங்கிய விருதுகளும் பட்டங்களும் வேறு; இது வாழ்வின் பாதியை வீட்டிற்கு வெளியே தொலைத்துவிட்டு, இன்றும் பாலைநிலந்தோறும் பணிநிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் வெங்கடாசலத்திற்கு முதன்முதலாய் கிடைத்த உலகதரவரிசை அங்கிகாரம் என்பதில் பெருமகிழ்ச்சி உண்டு..
தேர்வு குழுவிற்கும், தமிழ்நாடு பொறியாளர் குழுமத்திற்கும், நிர்வாகிகளுக்கும், முன்பின் உழைத்தவர்களுக்கும், எனது நிறுவன உழைப்பாளிகளுக்கும், என்னோடு பயணிக்கும் உங்களுக்கும் மனதிற்கினிய மகிழ்ச்சியோடு கலந்த கைகூப்பு... நிறைய அன்பு.. நெஞ்சினிக்கும் நன்றி..
வித்யாசாகர் (எ) வெங்கடாசலம் கோவிந்தன்
முகில் படிப்பகம் - https://youtu.be/njiWTY25D9g
த. பொ. குழுமம் - http://www.tefkuwait.com/galle ry
0 comments:
Post a Comment
Kindly post a comment.