1930-இல் காமராஜர் மற்றும் அவரைச் சார்ந்த 100 பேர்கள் மீது வெடிகுண்டு கொலை வழக்கு, தேசத்துரோகம் சாதி தூண்டுதல் என வன்முறைச்சட்டம் பாய்ந்தது; அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். அனைத்து ஆதாரங்களும் காமராஜருக்கு எதிராகவே இருந்தன.பல வழக்கறிஞர்கள் இவ்வழக்கை ஏற்று நடத்தவே அஞ்சினர்.
ஆனால், வ.உ.சிதம்பரம் பிள்ளையோ தாமாகவே இவ்வழக்கை எடுத்து திறமையுடன் வாதாடி காமராஜர் மற்றும் நூறுபேர்களையும் வழக்கினின்றும் விடுவித்தார்; விடுதலை வாங்கித் தந்தார்.
அன்றைக்கு வ.உ.சிதம்பரனார் இல்லையென்றால் இன்றைக்கு காமராஜர் என்பவரே இல்லை. இதை காமராஜரே தன் தாயாரிடம் அடிக்கடி சொல்லுவாராம். நெல்லையில் இருக்கும் வ.உ.சி. மணிமண்டபம் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டதேயாகும்.
வ.உ.சியை மிகத் தீவிரமாகவும் வெறித்தனமாகவும் விரும்பியவர்கள் மூவர் மட்டுமே ! பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், பெருந்தலைவர் காமராஜர், மாவீரன் மாடசாமிப் பிள்ளை ஆகியோர்களே அவர்கள்.என் சிதம்பர சிங்கம் மாசற்ற தங்கம் என தலையில் தூக்கி வைச்சுக் கொண்டாடியவர் தேவர் ...நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் அடிக்கடி தேவர் சொல்லும் ஒரே வார்த்தை சிதம்பர சிங்கம்.....
இதே போன்று, தன்னுடைய இதயத்தில் வ.உ.சி.க்குத் தனியிடம் கொடுத்தவர் காமராஜர். வ.உ.சி.க்காக ஒரு பாடலையே பாடியுள்ளார்.
வ.உ.சிதம்பரனார் குறித்து காமராஜர் பாடிய பாடல் :
கப்பல் ஓட்டிய தமிழன் யாரு ?
கண்மணி கூறு.
இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்த கப்பலு ஓட்டியவர்
இந்தியாவில் ஒருவர்தானே
சிங்கம் அவர் தென் தமிழன்
சிதம்பரனாரு.
வ.உ.சி. என்றாலே வள்ளல்
என்பாரே.
வரலாறு அறிந்தாலே வீரன்
என்பாரே.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவார்.
வெள்ளை அவன் இவராலே
வியர்த்துக் கொட்டுவான்.
பக்க ஊரு பதிந்த வீரம்
பாஞ்சாலங்குறிச்சி
திக்கெல்லாம் திகில் பரவும்
தில்லென உதிச்சு.
கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட வீரரு
ஓட்டப்பிடாரம் உலகநாதர்
பெற்ற பிள்ளையிவரு.
செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்தாரு.
சுதந்திரந்தான் சொத்து என
சுகமிழந்தாரு.
வக்கீலாக வாழ்ந்த இவரு
கல்லுடைச்சாரு
வாழும் நாட்டின் உரிமைக்காக
வறுமைப் பட்டாரு.
பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்தாரு.
மிச்சம் என்ன உயிர் அதையும்
துச்சம் என்றாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு.
மேற்படி வழக்குபற்றிய தகவல்களும், காமராஜர் பாடிய பாடல் குறித்த செய்தியும் 1930 , 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த குடியரசு இதழ்களில் இடம்பெற்றுள்ளதாக 26-10-2016-இல் வந்த வாட்ஸப் செய்தி கூறுகின்றது. இதழின் காலம் குறிப்பிடப்படவில்லை. வலைப்பூ அன்பர்கள் உதவலாம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.