Tuesday, August 30, 2016

உலகம் சுற்றிய வாலிபன் !






ஒற்றை என்ஜின் பொருத்திய சிறிய ரக விமானத்தில் தன்னந்தனியாக உலகைச் சுற்றி வந்து சாதனை புரிந்திருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் லாக்லன் ஸ்மார்ட்.

மிக இளம் வயதில் உலகைச் சுற்றியவர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் மரூக்கிடோர் விமான நிலையத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி புறப்பட்ட அவர், உலகைச் சுற்றி வந்து ஏறத்தாழ இரண்டு மாத காலத்துக்குப் பிறகு சனிக்கிழமை அதே விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

அவரது 45 ஆயிரம் கி.மீ. பயணத்தின் இடையே 15 நாடுகளில் 24 இடங்களில் இறங்கினார். ஓய்வெடுக்கவும், உணவு சேகரிக்கவும், எரிபொருள் நிரப்பவும் பயன்படுத்திக் கொண்டார். இந்த உலக சாதனைப் பயணத்தை மேற்கொள்ள கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வந்தார்.

தனது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது என்றார் அவர். வானிலை சில சமயங்களில் முக்கியப் பிரச்னையாக இருந்தது. பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறந்தபோது கடும் புயல் வீசியதும், கலிபோர்னியா - ஹவாய் இடையே புயல் வீசியதும் தனது பயணத்தை தாமதப்படுத்தியதைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் தரவில்லை என்றார். சில விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தர மறுத்ததாகவும், சில இடங்களில் மொழிப் பிரச்னை ஏற்பட்டதாகவும் லாக்லன் ஸ்மார்ட் கூறினார்.

மிகச் சிறிய வயதில் தன்னந்தனியாக உலகைச் சுற்றி வந்து சாதனை நிகழ்த்தியபோது அவருடைய வயது 18 ஆண்டுகள், 7 மாதம், 21 நாட்களாகும். இதற்கு முந்தைய உலக சாதனையை அமெரிக்க இளைஞர் மாத்யூ கத்மில்லர் நிகழ்த்திய

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.