Monday, August 29, 2016

தைவான் தனி நாடா ....... இல்லையா?




‘உலகில் ஒரே ஒரு சீனா தான். தைவானுக்கு வேண்டுமானால் சுயாட்சி அதிகாரம் தருகிறோம். தனி நாடு அந்தஸ்து கொடுத்தால் நடப்பதே வேறு' என்று சீனா ஐநாவை எச்சரித்தது. சீனாவின் அதட்டலுக்குப் பயந்து, தைவானைத் தனி நாடாக அங்கீகரிக்க மறுத்து, உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்ளவும் மறுத்துவிட்டது ஐநா!

ஆகாயத்தில் மேகத்தின் வடிவத்தைப் பார்த்து, “ஐ... முயல், இது யானை” என்று சந்தோஷமாகக் கத்துவோம்ல… அதே மனநிலையோடு, சீன வரைபடத்தைப் பாருங்க. ‘உட்கார்ந்திருக்கும் கோழி’ சீனா என்றால், அதன் முன்னால் நெல்மணி போல் கிடக்கிற தீவுதான் தைவான்.

சீனாவில் 1927 முதல் 1949 வரையில் பெரிய உள்நாட்டுப் போர் நடந்துச்சில்ல. அதுல ஜெயிச்ச கம்யூனிஸ்ட் கட்சி, சீன ஆட்சியைக் கைப்பற்றியதோடு, அந்நாட்டுக்கு ‘சீன மக்கள் குடியரசு’ன்னு பெயரிட்டது. போரில் தோற்று நாட்டைவிட்டே ஓடிப்போனது தேசியவாதக் கட்சி (சீனமொழியில்: கோமிங்டாங் கட்சி). அது தைவான் தீவை மட்டும் தக்க வைத்துக்கொண்டு, அங்கு ‘சீனக் குடியரசு’ என்ற பெயரில் தனி அரசாங்கத்தை ஏற்படுத்தியது.

‘நாட்டாமை’ படத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட பொன்னம்பலம், நாட்டாமை குடும்பத்தைப் பழிவாங்கக் காத்துக்கொண்டிருப்பாரே… அதைப் போன்ற வெறியோடு இருந்தார் அந்நாட்டு அதிபர் சியாங்கை சேக். “முழு சீனா வும் எங்களுடையதே. விரைவில் அதை மீட்டு சீனக் குடியரசுடன் (தைவானுடன்) இணைப்போம்” என்று கர்ஜித்தார். ஆனால், சாகும் வரையில் அவரது கனவு நனவாகவில்லை. சீனாவின் பலத்தைத் தாமதமாக உணர்ந்த தைவான், தங்கள் கோரிக்கையில் இருந்து இறங்கிவந்தது. “நாங்கள் இனிமேல் சீனாவின் இதர பகுதிகளைக் கோர மாட்டோம். எங்களைத் தனி நாடாக அங்கீகரித்து, ஐநா சபையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டது.

“உலகில் ஒரே ஒரு சீனா தான். தைவானுக்கு வேண்டுமானால் சுயாட்சி அதிகாரம் தருகிறோம். தனி நாடு அந்தஸ்து கொடுத்தால் நடப்பதே வேறு” என்று சீனா ஐநாவை எச்சரித்தது. சீனாவின் அதட்டலுக்குப் பயந்து, தைவானைத் தனி நாடாக அங்கீகரிக்க மறுத்து, உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது ஐநா. தைவான் மக்கள் கெஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள். சீனா விஞ்சிக்கொண்டே இருக்கிறது. ஐநா சபை சொல்றதைத்தானே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்? அதன்படி, தனி அரசு, தனி ராணுவம், தனி மொழி, ஜனநாயகம் எல்லாம் இருந்தும் தைவான் தனி நாடு கிடையாது.

நன்றி :- கே.. கே. மகேஷ். இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.