Monday, August 29, 2016

மினி பஸ்கள் மூலம் ரூ.46 கோடி அரசுக்கு வருமானம்



சென்னை  - மினி பேருந்துகள் மூலம் ரூ. 46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்., விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  தமிழக சட்டசபையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-  தற்போது 200 சிறிய பேருந்துகள் மற்றும் 10 உபரி சிறிய பேருந்துகள் என சென்னை மாநகராட்சியில் இயங்குகின்றன.

பேருந்துகள் செல்லமுடியாத குறுகிய சாலைகளிலும் சென்று கடைக்கோடி மக்களும் போக்குவரத்துச் சேவையினை பெறும் வகையில் இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்திருக்கிறார் . இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் சுமார் 6 கோடியே 32 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இச்சிறிய பேருந்துகள் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகம் 31.03.2016 தேதிவரை சுமார்  45 கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 622 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி :- தினபூமி


0 comments:

Post a Comment

Kindly post a comment.