Saturday, November 7, 2015

காணாமற்போனோர் குறித்து ஆராய ஐ.நா விசேடகுழு இலங்கை வருகை -

காணாமற்போனோர் குறித்து ஆராய ஐ.நா விசேடகுழு இலங்கை வருகைhttp://onlineuthayan.com/news/2533
காணாமற்போனோர் குறித்து ஆராய ஐ.நா விசேடகுழு இலங்கை வருகை
காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற் குழுவின் விசேட பிரதிநிதிகள் எதிர்வரும் 09 ஆம் திகதி  இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே நேற்று தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை விரிவாக ஆராயும் இக்குழு அது குறித்த தமது அறிக்கையினை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமென்றும் அவர்  குறிப்பிட்டார்.

இதேவேளை இக்குழு காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்த பரணகம குழுவின் தலைவரை சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள எதிர்கால செயற்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் உதவி செய்யும் நோக்கில் மனிதாபிமான அடிப்படையிலேயே இக்குழுவின் விஜயம் அமைய வுள்ளதாக சுட்டிக்காட்டிய கொலன்னே, குற்றவிசாரணை மேற்கொள்வது இவர்களின் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் செயற்குழுவின் ஐ.நா உப தலைவர் பேர்னார்ட் டூஹெ ய்ம் தலைமையில் ஐந்து பிரதிநிதிகளடங்கிய குழுவே திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. இக்குழுவானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி ஐ. நா. பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

மேலும் இக்குழு கொழும்பில் 05 நாட்களும் வெளி மாவட்டங்களில் ஏனைய நாட்களிலும் தங்க ஏற்பாடா கியுள்ளது. இதன்படி எதிர்வரும் 09, 10, 16, 17, 18 ஆகிய திகதிகளில் கொழும் பிலும் ஏனைய நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதே சங்களிலுமிருந்து இக்குழு செயற்பட வுள்ளது.

சட்டம் ஒழுங்கு, நீதி, பாதுகாப்பு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முக்கியஸ்தர்கள், இராணுவம் மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண ஆளுநர்கள், வடக்கு மற்றும் கிழக்கின் முதலமைச்சர்கள் ஆகியோரை இக்குழு சந்தித்து உரையாடும்.

மேற்படி ஐ.நா. செயற்குழுவானது இலங்கை அரசாங்கத்துக்கு நீண்டகால அடிப்படையில் முன்வைத்த 12 ஆயிரத்து 341 விசாரணைகளில் 6 ஆயிரத்து 590 விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக கூறிய அவர் எஞ்சியவற்றுள் சுமார் 4 ஆயிரத்து 57 விசாரணைகள் 1991 ஆம் ஆண்டிற்கு முற்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.

காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய் வதற்காக 1980 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இச்செயற்குழு நிறுவப்பட்டது. இக்குழு தமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை குறித்த அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி பின்னர் அதன் செயற்பாடுகளை ஆராய்வதுடன் எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் உதவிகளை செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்குமிடையே பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பாலமாக செயற்படுமே தவிர குற்ற விசாரணைகளில் ஈடுபடாது என்றும் கொலன்னே விளக்கமளித்தார்.

இக்குழு இலங்கை வருவது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1991, 1992, 1997 ஆம் ஆண்டுகளில் இக்குழு இலங்கை வந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இக்குழுவினரை இலங்கைக்கு அழைக்க தீர்மா னிக்கப்பட்டது. எனினும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இக்குழுவை அழைக்க தீர்மானித்த போதும் பொது தேர்தல் காரணமாக நவம்பருக்கு இது ஒத்திவைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

விஜயத்தின் இறுதி நாளான 18 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இவர்கள் ஐ. நா. தலைமையகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.