Wednesday, November 11, 2015

பிஹார் தேர்தல் :-இணையதளப் பதிவுகளிருந்து இந்து வெளியிட்ட கருத்துச்சித்திரங்கள்


கருப்பு கருணா
பிஹார் தோல்விக்குப் பிரதமரைக் குறை சொல்லாதீர் : பாஜக
அப்பிடியா… சரி விடுங்க. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்குமாறு கம்போடியா அதிபரைக் கேட்டுக்கொள்கிறோம்.
சிந்தன் ரா
மாட்ட காட்டி ஓட்ட கறக்க நினைச்சவங்களுக்கு, கேரளாவுல ஒரு உதை, பிஹார்ல ஒரு உதை... ‪#‎செண்பகமே
ஷோபா டே
ஒரு துறவி சொன்னார்: “பிஹார் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கின்றன. பசு பால்தான் தரும் வாக்கு அல்ல!”
ஆர். முத்துக்குமார்
வலுவான எதிர்க் கட்சி தேவை என்று பிஹார் மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கான வெற்றி என்கிறார் நிதிஷ்குமார். எதிரியின் தோல்வி பற்றிப் பேசும்போதும் அழகான அரசியல் நாகரிகம். வாழ்த்துகள் நிதிஷ்குமார்.
கார்மல் இக்னேஷியஸ்
நாளந்தா தொடங்கி இன்றுவரை பாடம் சொல்லும் பூமியாக இருக்கிறது பாடலிபுத்திரம்!
அருள் எழிலன்
பிஹாரின் பெரும்பான்மை இந்துக்கள் மோடி கும்பலிடம் இருந்து இந்தியாவைக் கைப்பற்றியிருக்கிறார்கள்!
சா. அனுஷ்
‘பீஃப்’ எடு… கொண்டாடு!
சரவணன் சந்திரன்
தொலைக்காட்சியில் பிஹார் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிதிஷ்குமார் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது அருகில் பாவமாக, லாலு பிரசாத் யாதவ் அமர்ந்துகொண்டிருந்தார். உடனிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 18 வயது மாணவன், “சார், இந்த லாலு பிரசாத் யாதவ் நல்லவரா... கெட்டவரா?” என்று கேட்டான். “தெரியலையேப்பா...” என்றுதான் சொன்னேன்.
மனுஷ்ய புத்திரன்
தீபாவளிக் கொண்டாட்டங்களை இந்தியா முழுக்க இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவைத்த மோடி - அமித் ஷா - மோகன் பகவத் ஆகியோருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
அ. முத்துகிருஷ்ணன்
மோடி ஜெயித்துவிட்டார் என்று நீங்கள் போட்ட ஸ்டேட்டஸை அழித்துவிட்டீர்கள், மாடு பாஜக மீது போட்ட சாணத்தை யார் அழிப்பது?
வெங்கடேஷ் ஆறுமுகம்
மைண்ட் ப்ளோயிங் அப்படின்னா என்னாங்க?
இன்னிக்கி இதை அத்வானி கிட்ட கேளுங்க!
மருதன் கங்காதரன்
கருத்துக் கணிப்புகள் பெருமளவில் ஏன் பொய்த்துப்போகின்றன என்பதற்கு யோகேந்திர யாதவ் (முன்னாள் ஆம் ஆத்மி) அளித்த ஒரு விளக்கம் முக்கியமானது.
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று மைக்கை நீட்டிக் கேட்கும்போது பதிலளிப்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், மேல்தட்டைச் சேர்ந்தவர்கள், கேமராவைக் கண்டு பயப்படாதவர்கள்.
வெற்றியைத் தீர்மானிப்பவர்களில் கணிசமானவர்கள் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் அதிகம் படிக்காதவர்கள், கேமராவைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவர்கள், தயக்கத்துடன் நகர்பவர்கள். ஒருவேளை இவர்களை கேமராவில் பிடிக்க முடிந்தாலும், என்ன சொன்னால் பாதுகாப்பாக இருக்குமோ அதையே சொல்வார்கள். பிஹார் கருத்துக் கணிப்புகளில் நடந்ததும் அதுதான்.
விஜயசங்கர் ராமச்சந்திரன்
பிஹாரில் வெள்ளம்.
எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக்கொடுத்தனர்.
மக்கள் வாக்குகளைத் திரும்ப எடுத்துக்கொண்டனர்!
ஹாப்பி பர்த் டே அத்வானிஜி
வடக்குப்பட்டி ராமசாமி
அப்போ வெளிநாட்டு டிக்கெட் கேன்சலா? இந்தியாவுலதான் இருக்கணுமா? ச்சே!
முகமது சிராஜுதீன்
முகத்தில் கரி பூசும் உரிமை உங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் இருக்கிறது என்று சொன்ன பிஹார் மக்களுக்கு வாழ்த்துகள்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.