Thursday, November 12, 2015

சென்னையில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

வெள்ளக்காடான கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில், புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
தென் மேற்கு வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு அருகே திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. அப்போது, கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.
குறிப்பாக, நெய்வேலியில் 480 மி.மீ. அளவுக்கு பலத்த மழை கொட்டியது. தொடர் மழையால், நீலகிரி, சேலம், நெய்வேலி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இடியுடன்கூடிய மழை: சென்னை, புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குப் பின்னர் மழை நின்றது. வழக்கம்போல, புதன்கிழமை அதிகாலை மழையின்றி காணப்பட்டது. பின்னர், கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.
அம்பத்தூர், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், நந்தனம், எழும்பூர் உள்ளிட்ட நகரின் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் மேகங்கள்கூடி, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
எழும்பூர், சைதாப்பேட்டை, அம்பத்தூர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கெனவே மழை நீர் வடியாத நிலையில், புதன்கிழமை இரவில் பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்பட்டன.

தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.