Thursday, November 12, 2015

காலம் எப்போதும் பின்னோக்கிச் செல்வதில்லை. - கலீல்ஜிப்ரான்


உங்கள்  குழந்தைகள்  உங்களுடையவர்களல்ல

வாழத்துடிக்கும்  வாழ்க்கையின்  பிள்ளைகள்

அவர்கள்  உங்கள்  மூலமாய்  வந்தவர்கள்தான்

உங்களிடமிருந்து  வந்தவர்கள்  அல்ல.

உம்மோடு  இருந்தாலும்  உமக்குச்  சொந்தமானவர்களல்ல.

அவர்களுக்கு  உங்கள்  அன்பைல்  கொடுங்கள்.

உங்கள்  கருத்துக்களைத்  திணிக்காதீர்கள்.

ஏனெனில்,  அவர்கள்  சுயகருத்து  உடையவர்கள்.

நீங்கள்  அவர்களுக்கு  உடலைக்  கொடுத்திருக்கலாம்.

ஆனால்,  ஆன்மாவைக்  கொடுக்க  முடியாது.

அவர்களது  ஆன்மாக்கள்  நாளைய  உலகில்  உள்ளன.

உங்களால்  அங்கு  செல்லவும்  முடியாது.

அதைப்பற்றிக்  கனவு  காணவும்  முடியாது.

நீங்கள்  அவர்களைப்  போலாக  முயலலாம்.

அவர்களை  உங்களைப்  போலாக்க  முயலாதீர்கள்.

காலம்  எப்போதும்  பின்னோக்கிச்  செல்வதில்லை.

வில்லான  உங்களிடமிருந்து  அம்பான  அவர்கள்

வாழ்வின்  முன்னேற்றப்  பாதையில்  செல்கின்றனர்.

கடவுள்  எனும்  வில்லாளி  உங்களை  வளைத்து

முடிவற்ற  பயணத்திற்கு  அம்பை  எய்கின்றார்.

கடவுளின்  கரங்களால்  நீங்கள்  வளைக்கப்படுகிறீர்கள்.

வளைக்கப்படுதல்  மகிழ்ச்சியைத்  தரட்டும்.

பறந்து  செல்லும்  அம்பை  அன்பு  செய்யும்  அவர்,

நிலையான  வில்லான  உம்மையும்  அன்பு  செய்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று பிற்பகலில்  அஞ்சலில் கிடைத்தது  புதியதோர்  புத்தகம். 

கற்றல்  குறைபாடுகள்  குறித்த  ஆய்வுநூல்  அது.

கசக்கும்  கல்வியும்  கற்கண்டாகும்”  என்னும்  தலைப்பைக்  கொண்டது.
 எழுத்தாளர் பிரியசகி,  ஜோசப்  ஜெயராஜ்  ( சலேசிய சபை  )  இணைந்து  எழுதியது.

நூலின்     மையக்கருவை  வெளிப்படுத்தும்   வண்ணம்  புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கலீல்ஜிப்ரான்  பாடல் இங்கு  பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னும் வரும்.

அரும்பு  பதிப்பகம்  &  நிறைவகம்  வாழ்வு  நிறைவாக.!

கிடைக்குமிடம்:-

Arumbu  Publications  &  Niraivagam

45,  Landons  Road,  Kilpak

Chennai -600010.
-------------------------------------------------,
044 - 26612138  /  26612140
-------------------------------------------------
www.arumbu.org

accpublications24@gmail.com

www.niraivaagam.org

infoniraivagam@gmail.com
,
-----------

------------------------------------------------------------------------------------------------------------

24.10.2015 அன்று வெளியிடப்படவுள்ள எம் "கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்" என்ற நூலுக்கு "இது கல்வியாளர்களின் கவனத்திற்குச் செல்லவேண்டிய நூல்" என வாழ்த்துரை வழங்கிய திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும், கற்றல் குறைபாட்டினால் பள்ளிப்பருவத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களையும் அதிலிருந்து மீண்டுத் தான் முன்னேறியதையும் சுவையான மலரும் நினைவுகளாய்த் தந்து நூலுக்கு மெருகூட்டிய பலேபாண்டியா திரைப்பட இயக்குனர் திரு.சித்தார்த் சந்திரசேகர் அவர்களுக்கும், டிஸ்லெக்ஸியாவைப் பற்றிய நுணுக்கமானத் தகவல்கள் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளதென மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சார்பில் வாழ்த்துரை வழங்கிய திருமதி.கீதாராகவன் அவர்களுக்கும், சமுதாயத்திற்கு இது ஒர் வரப்பிரசாதம் என வாழ்த்தியுள்ள கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கும், ஆசியுரை வழங்கியுள்ள சலேசிய தெற்காசிய மண்டலத் தலைவர் அருட்பணி.மரியா ஆரோக்கியம் கனகா, சலேசிய மாநிலத் தலைவர் அருட்பணி.ஜெயபாலன், முன்னாள் சலேசிய மாநிலத் தலைவர் ஸ்தனிஸ்லாஸ், தென்னக இரெயில்வே உதவி மேலாளர் திரு.சேவியர் தன்ராஜ், முதன்மை மொழி ஆசிரியர் திரு.சகாயராஜ்(மஸ்கட்) ஆகிய யாவர்க்கும் எம் மனமார்ந்த நன்றிகள். -பிரியசகி

0 comments:

Post a Comment

Kindly post a comment.