Sunday, November 22, 2015

நாட்டின் வளர்ச்சிக்கு நதிகளை இணைப்பது அவசியம் !

‘தேசிய நீர்வழிப் பாதைகள் மூலம் நதிநீர் இணைப்பு’ எனும் தலைப்பிலான 2 நாள் மாநாடு சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டு மாநாட்டில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். உடன் விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன், ‘நவாட் டெக்’ அமைப்பின் தலைவர் ஏ.சி.காமராஜ், விஐடி பல்கலை. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன். படம்: க.ஸ்ரீபரத்

தேசிய நீர்வழிப் பாதைகள் மூலம் நதிநீர் இணைப்பு’ எனும் தலைப்பிலான 2 நாள் மாநாடு 

சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

 நிறைவு நாளான நேற்று ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டு

 மாநாட்டில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

 உடன் விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன், 

நவாட் டெக்’ அமைப்பின் தலைவர் ஏ.சி.காமராஜ், 

விஐடி பல்கலை. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன்,

 உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன். 

படம்: க.ஸ்ரீபரத்

நாட்டின் வளர்ச்சிக்கு நதிகளை இணைப்பது அவசியமானது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.

சென்னை வண்டலூரை அடுத் துள்ள விஐடி பல்கலைக்கழகத்தில், ‘நீர்வழிப் பாதைகளின் மூலம் நதிநீர் இணைப்பு’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நதிநீர் இணைப்பு தொடர்பான தொழில்நுட்ப அமர்வில், தமிழக நீர் தொழில்நுட்ப மைய இயக்கு நர் பி.ஜே.பாண்டியன், முன்னாள் அரசு செயலர் என்.ஆர்.கிருஷ் ணன், நேஷனல் அக்ரோஃபார்ம்ஸ் இயக்குநர் எஸ்.வி.முருகன், தமிழ்நாடு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்ளிட்டோர் பேசினர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதி பொன்னுசாமி பேசும்போது, ‘‘பிளாஸ்டிக் பெருக்கத்தால் நிலத்தடி நீர் குறைகிறது. இருக்கிற நீரை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண் டும்’’ என்றார். தமிழக நீர் தொழில்நுட்ப மைய இயக்குநர் பி.ஜே.பாண்டியன் பேசும்போது, ‘‘தமிழகம் நீர் பற்றாக்குறையுள்ள மாநிலமாக உள்ளது. ஒரு கிலோ நெல்லை அறுவடை செய்ய 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்’’ என்றார்.

மாநாட்டில் பங்கேற்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

நதிகள் இணைப்பு தொடர்பாக மாநாடு நடத்தப்படுவது பாராட்டுக் குரியது. நாட்டின் வளர்ச்சிக்கு நதிநீர் இணைப்பு என்பது மிகவும் அவசியமானது. அதனால், நாட்டின் பொருளாதார வலிமை பெருகும், விவசாயம் மற்றும் தொழில்வளம் பெருகும். விவசாயம் செழிப்ப தோடு, நிலத்தடி நீர்வளமும் பெருகும்.

மழைநீரை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 150 முதல் 180 கோடியாக உயரக் கூடும். அப்போது 450 மில்லியன் டன் உணவுத்தேவை இருக்கும். இதற்கு 160 மில்லியன் ஹெக்டேரில் விவசாயம் செய்வது அவசியம் என்று தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. மாநிலங்களுக்குள்ளான நதி களை இணைப்பதற்கான 46 பரிந் துரைகளை அந்த ஆணையம் பெற்றுள்ளது. கடந்த மார்ச் நிலவரப்படி 35 பரிந்துரைகளுக் கான அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மகாராஷ்டிரம், தமிழ கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களில் நதிகளை இணைக்க விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி யான விஷயம். நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழுவின் 5-வது கூட்டத்தில் நதிநீர் இணைப்பை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. நதிகள் இணைந்தால் அனைத்து மாநிலங் களும் பயனடையும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

‘‘நீர்வழிப் பாதைகளை இணைப் பதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். நம்மிடம் உள்ள ஆறு, குளம், ஏரி, கால்வாய்களை பாதுகாக்க நாமே முன்வர வேண் டும்’’ என்று விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவ நாதன் கேட்டுக் கொண்டார்.

நதிநீர் இணைப்புக்காக முன்பு உருவாக்கப்பட்ட திட்டங்களில் குறைகள் இருந்தன. ஆனால், நீர்வழிப்பாதைகள் மூலம் நதிகளை இணைப்பதால், செலவு குறையும். விவசாயம், தொழில் வளம், வேலைவாய்ப்பு, மின்உற்பத்தி பெருகும்’’ என்று ‘நவாட் டெக்’ நிறுவனத் தலைவர் ஏ.சி.காமராஜ் கூறினார்.

Keywords: நாட்டின் வளர்ச்சி, நதிகளை இணைப்பது அவசியம், ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தல்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.