Sunday, November 1, 2015

சோதனையைச் சாதனை ஆக்கியவர்!

First Published : 25 October 2015 08:00 AM IST
இயல்பிலேயே துணிச்சலானவர் அந்த எழுத்தாளர். தமது சிறுவயதிலும்... கடும் உழைப்பால் தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டவர். தினக்கூலியாகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. தனது வாழ்வில் இவர் சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் ஏராளம்.
 ஒருமுறை, பள்ளியில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த போது, பந்து தாக்கியதால் கண் பழுதானது. பிறகு, ஒரு யுத்தத்தின் போது பெரிய காயம் ஏற்பட்டது. மற்றொரு முறை, ஆப்பிரிக்கப் பயணத்தின் போது இவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. உறவினர்கள் இவர் இறந்துவிட்டதாகவே எண்ணினர். ஆனால் எல்லாரும் ஆச்சரியப்படும் வகைகளில் உயிர் பிழைத்தார். இப்படி வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற  இன்னல்கள் பட்டாலும் இறுதியில், தான் எழுதிய நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார். சரி, புகழ் பெற்ற இந்த எழுத்தாளர் யார்?
அவர்தான் எர்னஸ்ட் ஹெமிங்வே. இவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த நாவலின் பெயர்.
"கடலும் கிழவனும்'

Image result for எர்னஸ்ட் ஹெமிங்வே
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.