Wednesday, November 18, 2015

சர்க்கரை நோய் இருந்தால் விழித்திரையை பரிசோதிப்பது அவசியம்



சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தவுடன் விழித்திரையைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

 உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, சென்னை மந்தைவெளி சங்கர நேத்ராலயா நவசுஜா மையம், சர்வதேச அரிமா சங்கம் (மாவட்டம் 324ஏ8) ஆகியன இணைந்து இலவச பரிசோதனை முகாமையும், சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் அண்மையில் நடத்தின. 

 இதில், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம், விழித்திரை சிகிச்சை நிபுணர் ஜி.சுகனேஸ்வரி ஆகியோர் பேசியதாவது:-


 ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், முதலில் பாதிக்கப்படுவது விழித்திரைதான். இதனால்தான் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தவுடன் விழித்திரையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒரு முறை தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் விழித்திரை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றனர்.

 முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் விழித்திரை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைப் பரிசோதனை செய்துகொண்டனர்.

செய்தி :- தினமணி  படம் :- காயல்
 
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.