Wednesday, November 11, 2015

மியான்மர் தேர்தலில் ஆங்சான் சூ கியின் கட்சி வெற்றி




யாங்கூன்,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகலில் தேர்தல் முடிவு வெளியானது. யாங்கூன் நகரில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளை ஆங்சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சியான என்.எல்.டி., வென்றுள்ளது. இதேபோல், நாடு முழுவதும் அக்கட்சிக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளியாகின.

அக்கட்சிக்கு 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. மியான்மர் அரசியல் அமைப்பு சட்டப்படி, 67 சதவீத வாக்குகளை பெற்றாலே ஆட்சி அமைக்க முடியும். ஆகையால், ஆங்சான் சூ கி கட்சி மியான்மரில் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

செய்தி ;-தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.