Monday, November 16, 2015

டிராம் வண்டியின் அலங்காரக் கும்மி (5 ஆம் ஜார்ஜ் மகுடம் சூட்டியபோது )





திருமகளுலவும்  சென்னை  யெழும்பூர்
டிராம்  வண்டி  சேட்டில்  போர்மேனாம்
அருமையுள்ல  தியாகறாய  ஆச்சாரி
அர்ப்புத  வண்டியின்  புதுமையைக்  கேள்.

சொல்லு  மாயிரத்தி  அன்னூர்  விளக்குகள்
சுந்தரமாகவே  செய்து  மாட்டி
நல்ல  எலெக்ட்றிக்  பவுர்  கொடுத்தவர்
நடத்துஞ்  சேதியைக்  கேளுங்கடி

ஜோன்சுபவல்  துரை  முனிசாமி  றாஜாவும்
சொகுசுள்ள  டிரைவர்  லேபர்ன்  துரை
காண்  மயிலான்  லேடியுடனன்று
களித்து  வருவதைக்  கேளுங்கடி

நட்சத்திரம்  போலச்  தீபத்தின்  ஜோதிகள்
நாட்டி லெங்கும்  பிரகாசிக்க
பட்சமுடனே  திரு  மயிலைக்கி
பண்பாய்  வந்தார்  பாருங்கடி

முன்புரத்தில்  ஜோன்ஸ்துரையும்  பின்புரத்தில்  பவுல்துரையும்
முக்கியமாகவே  நின்று  கொண்டு
நன்னயமாக  மெதுவாக  நடத்திய
நாகரீகம்  பார்த்துக்  கொம்மியடி

மருநாள்  சனிவாரம்  மாலை  யாறு  மணி
மண்டலம்  புகழ  மயன்  வாழும்
திருஅல்லிக்கேணி  அமட்டன்  வாராவதி
தெளிவாய்  விட்டார்  பாருங்கடி

பகருதர்க்  கரிய  பத்தாந்  திகதி
பட்சமா  யாதிவார  மதில்
சுகராய்  புரச  வாக்கத்திர்க்கு  விட்ட
சொகுசச்  சொல்லிக்  கொம்மியடி
                                                                    -- ஆ.சி. தோப்பாசாமி 1911

நன்றி :- தமிழ்நாடு

                நூறாண்டுக்கு  முந்தைய  பயணக் கட்டுரைகள்

திரட்டித்  தொகுத்தவர் :- ஏ.கே.செட்டியார் (1968 )

சந்தியா  பதிப்பகம், 044- 24896979 (2009, 2012 )



1 comments:

  1. Oh my goodness! Amazing article dude! Thank you,
    However I am going through difficulties with your
    RSS. I don't know the reason why I can't join it. Is there anybody getting similar
    RSS problems? Anyone who knows the solution will you kindly respond?
    Thanks!!

    my website :: giveaway

    ReplyDelete

Kindly post a comment.