Sunday, November 1, 2015

கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க - கடைசி நாள் ;29-02- 2016

பதாகை




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது. கண்ணதாசன் ஒரு கவிஞர்சிறுகதை,நாவல்கட்டுரை,நாடக எழுத்தாளர்திரைக்கதை வசனம் எழுதியவர்பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்;அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.
அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொது மக்களுக்கும் ஒரு பங்களிக்கும் வகையில் ஒரு முன்னோடி முயற்சியை எழுத்தாளர் கழகம் எடுத்துள்ளது.
ஆகவே கவியரசு கண்ணதாசன் விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்படி கவிஞர்கள்,எழுத்தாளர்கள்இலக்கிய ஆர்வலர்கள்கலைஞர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவரையும் எழுத்தாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது. பரிந்துரை செய்வதற்கான விதிகள் வருமாறு:
  1. விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கவிதைசிறுகதைநாவல்கட்டுரை,நாடகம்திரைக்கதை வசனம் (தொலைக்காட்சி உள்பட)பாடல் ஆகிய ஏழு துறைகளில் எதாவது ஒன்றில் சிறந்த எழுத்துத் திறன் பெற்றவராக விளங்க வேண்டும்.
  2. விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் 40 வயது அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். கண்ணதாசன் பிறந்த நாளான ஜூன் 24ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும்.
  3. அவர் சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ, நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
  4. பரிந்துரை செய்பவரும் குடியுரிமை உள்ளவராகவோ, நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும். ஆனால் அவர் 40 வயதிற்குக் கீழுள்ளவராக இருக்க வேண்டியதில்லை.
  5. விருதுக்குப் பரிந்துரை செய்யப்படுபவரின் தனித் திறன்கள், அவர் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றுள்ளார் என்ற விவரங்களுடன் அவரைப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களையும் பரிந்துரை செய்பவர் தெரிவிக்க வேண்டும்.
  6. ஒருவர் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்படுபவர் நூல் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
  8. பரிந்துரைக்கப்படுபவர்கள், பரிந்துரை செய்பவர் ஆகியோரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
  9. பரிந்துரைகளை aavanna19@gmail.com அல்லது subaaruna99@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ, BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ 15.11.2015க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  10. கிடைக்கும் பரிந்துரைகளுடன் விருதுத் தேர்வுக் குழு தனது சொந்தப் பரிந்துரைகளையும் பரிசீலித்து விருதுக்குரியவரைத் தெரிவு செய்யும்.விருதுத் தேர்வுக் குழுவின் பரிந்துரையே இறுதியானதாக இருக்கும்.
  11. அவருக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.
  12. மேல் விவரங்களுக்கு நா. ஆண்டியப்பன்தலைவர். சி.த.எ.க. (97849105) அல்லது திரு. சுப. அருணாசலம்செயலாளர்சி.த.எ.க. (93221138) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் முத்தமிழ் விழாவை ஒட்டி இந்தமுறை பொதுமக்களுக்கு குறுநாவல் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பரிசுகள்
முதல் பரிசு
$1,000
இரண்டாம் பரிசு
$750
மூன்றாம் பரிசு
$500
3 ஊக்கப் பரிசுகள்ஒவ்வொன்றும்
$250

குறுநாவலுக்கான விதிகள்
கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருக்க வேண்டும். குறுநாவல்கள் 6,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 குறுநாவல்கள் அனுப்பலாம். ஒவ்வொரு குறுநாவலுக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத குறுநாவல்கள் நிராகரிக்கப்படும்.
பொதுவான விதிகள்
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் இருப்போர் மட்டும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற செயலவை உறுப்பினர்கள் பங்கேற்கலாம். குறுநாவல்கள் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி குறுநாவலுடன் அனுப்ப வேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதி அனுப்பினால் கையெழுத்து, புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது. மேலும் சாதாரண அஞ்சலில்தான் அனுப்ப வேண்டும், மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது.
குறுநாவல் தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். போட்டி குறித்து நடுவர்களின் முடிவே இறுதியானது.
குறுநாவல்கள் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்BLK 723 # 13-149,Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு 29.02.2016க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். குறுநாவல் எழுதுவதற்குக் கால அவகாசம் தேவை என்பதால்தான் நான்கு மாதத்திற்கு முன்னரே போட்டி பற்றி அறிவித்துள்ளோம். மேல் விவரங்களுக்கு சுப. அருணாசலம் 93221138இராம. வயிரவன்  93860497 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.