Wednesday, October 7, 2015

ஆந்திரா இந்தியாவில்தான் இருக்கிறதா?

சிறைகளில் உள்ள 2 ஆயிரம் பழங்குடி மக்களை விடுவிக்க வேண்டும்: மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

திருவண்ணாமலையில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நிறைவு நாளில் பேசுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன்.

ஆந்திர சிறைகளில் உள்ள 2 ஆயிரம் பழங்குடி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெற்றது. மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித் தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவ ராக பி.டில்லிபாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளராக இரா.சரவ ணன், பொருளாளராக சடையப்பன், துணைத் தலைவர்களாக பெ.சண்முகம், வி.கே.ராஜு, சேகர், எல்.சிவலிங்கம், அண்ணாமலை, துணை செயலாளர்களாக எ.வி.சண்முகம், எம்.அழகேசன், கண்ணகி, ஜி.செல்வம், ஏ.பொன்னுசாமி உட்பட 53 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் பழங்குடி மக்களை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸாரை வன்மையாக கண் டிப்பது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்று வலியுறுத்துவது, ஆந்திர சிறைகளில் உள்ள 2 ஆயிரம் பழங்குடியின மக்களை விடுதலை செய்ய வலியுறுத்துவது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழகத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க மறுக்கும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை வன்மை யாக கண்டிப்பது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை மற்றும் ஈரோடு மாவட்டம் குத்தியாலத்தூர் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்குரிமை வழங்க வலியுறுத்துவது உள் ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற் றப்பட்டன.

திரிபுரா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜிதேந்திர சவுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் இரா.சரவணன் நன்றி கூறினார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.