Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Wednesday, October 7, 2015

அரிய மூலிகைச் செடிகளைப் பாதுகாக்க லடாக்கில் ஆய்வுமையம்!



காஷ்மீரின் லடாக் பனிப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் ஆய்வு மையம்.

காஷ்மீரின் லடாக் பனிப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் ஆய்வு மையம்.

மருத்துவ குணங்கள் மிகுந்த செடிகளைப் பாதுகாக்க, உலகின் மிக உயர்ந்த லடாக் பனிப் பிரதேசத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆய்வு மையம் ஒன்றை அமைத்துள்ளது.

காஷ்மீரின் லடாக் பகுதியில் பென்காங் என்ற ஏரி உள்ளது. இதன் அருகில் உள்ள சங்லா என்ற இடத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ), தனது ஆய்வு மையத்தை தொடங்கி உள்ளது. இந்த மையம் உலகிலேயே மிக உயர்ந்த பனிப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17,600 அடி உயரத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குணங்கள் மிகுந்த மூலிகைச் செடிகள், அரிய மற்றும் அருகி வரும் செடிகள், இந்த மையத்தில் பாதுகாக்கப்படும். இந்த மையத்தை டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் டாக்டர் எஸ்.கிறிஸ்டோபர் திறந்து வைத்தார். இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மிக உயர்ந்த பனிப் பிரதேசங்களில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான வேளாண் பொருட் கள், மூலிகை மருந்துகள், உணவுப் பொருட்கள், ஆடைகள் தயாரிக்க வும், இதுகுறித்த ஆய்வுகளில் ஈடு படவும் இந்த மையம் பயன்படும்’’ என்று தெரிவித்துள்ளன.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.