Sunday, October 11, 2015

ருத்ராட்ச மகிமை


Image result for ருத்ராட்சம்
சிவனுடைய கண்கள் என்று ருத்ராட்சங்களை கூறுவர். ருத்ராட்ச மரம் ஒரு தெய்வீக விருட்சமாகும். இம்மரத்துப் பழத்தின் உள்ளிருக்கும் விதையே குத்ராட்சம்.
ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு. "யோகசாரா' என்னும் நூல் ருத்ராட்சத்தின் பெருமைகளை விளக்குகிறது.
ஒரு முக ருத்ராட்சம்: "சிவன்' என்று பெயர்.இதை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷம் முதல் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி எவ்வித எதிர்ப்பினாலும் ஜெயிக்க முடியாதவராக உயர்வார்.
இரு முக ருத்ராட்சம்: "ஹர சௌரி' என்று பெயர். ஹோகத்தி முதலிய தோஷங்கள் நிவாரணமாகும்.
மூன்று முக ருத்ராட்சம்: "அக்னி' ருத்ராட்சம் ஆகும். இதை அணிந்தால் பருத்திப் பொதியில் நெருப்புப் பற்றினால் பொசுங்கி விடுவது போல் மூன்று ஜென்மாவில் செய்த பாவங்கள் போகும்.
நான்கு முக ருத்ராட்சம்: இதற்கு "தத்தாத்ரேயர்' என்று பெயர். இதை அணிந்தவர்களுக்கு மனிதனைக் கொன்ற பிரம்மஹத்தி நிவர்த்தி
யாகும்.
ஐந்து முக ருத்ராட்சம்: இதை "காலக்னி' என்பர். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். குடிப்பழக்கம் முதலிய செய்யத் தகாத பாவங்களை எல்லாம் நீக்கும்.
ஆறு முக ருத்ராட்சம்: "சண் முக' ருத்ராட்சமாகும். இதையணிந்தால் கரு அழித்தல் முதலிய பாவங்கள் நீங்கும்.
ஏழு முக ருத்ராட்சம்: "ஆனந்த' ருத்ராட்சம் எனப்படும். தங்கம் முதலிய திருட்டு தோஷம் ஏற்படாமல் ஐஸ்வர்யத்தைக் காக்கும்.
எண் முக ருத்ராட்சம்: "விநாயகர்' ருத்ராட்சம். பொய், களவு, சூது போன்ற பஞ்சமா
பாதகங்கள் செய்த பாவங்களைப் போக்கும்.
ஒன்பது முக ருத்ராட்சம்: பைரவ ருத்ராட்சம். இதை அணிந்தால் சிவகாயுச்சிய பதவி கிட்டும்.
பத்து முக ருத்ராட்சம்: "விஷ்ணு' என்று பெயர். இதை அணிந்தால் பூதப்பிரேத பைசாச தோஷங்கள் ஒழியும்.
பதினோரு முகம்: "ஏகாதச' ருத்ராட்சம். இதையணிந்தால் பல யாகங்களைச் செய்த புண்ணியங்கள் கிடைக்கும்.
பன்னிரண்டு முகம்: "அர்க்க' ருத்ராட்சம் என்பர். அணிந்தால் பல புண்ணிய நதிகளின் ஸ்நான பலன் கிடைக்கும். நீராடும் ஜலமே புனிதமடையும்.
பதின்மூன்று முகம்: "காம ருத்ராட்சம்' எல்லா விருப்பங்களும் நிறைவேறும். நினைத்தது நினைத்தபடி சித்திக்கும்.
பதினான்கு முகம்: "ஸ்ரீகண்ட' ருத்ராட்சம். இதை அணிபவர், தான் பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்ப்பதோடு தம் வம்சத்தையும் விருத்தி பண்ணுவார். அத்தனை விசேஷம் பொருந்தியது.
ருத்ராட்சத்தை பஞ்சாட்சரம் (நமசிவாய) மந்திரம் சொல்லி, பால், தேன் முதலிய பஞ்சகவ்யங்களால் சுத்தி செய்து அணிய வேண்டும். காது கழுத்து கைகளிலும் அணியலாம். பஞ்ச முக ருத்ராட்சம் யாவருக்கும் உத்தமம்.
ஒன்பது முக ருத்ராட்சத்தை வலது மணிக்கட்டில் இடது கையால் அணிந்தால் நலம். இதனால் சரீரத்தில் ஓடும் நரம்புகளின் திரிகுண தோஷத்தை (வாதம், பித்தம், சிலேத்துமம்) நிவர்த்திக்கும். இதைத் தலையில் பத்து முக ருத்ராட்சமாகச் சேர்த்து அணியலாம். ஐந்து கொத்துக்களாகச் சேர்த்து காதில் அணியலாம்.
25,27,54,108 ருத்ராட்சங்களை ஒன்பது முகமாக ஒன்றுபோல் சேர்த்து மாலையாகவும் அணிந்து கொள்ளலாம். நித்யகர்மானுஷ்டானத்தைச் செய்யாவிட்டாலும் இதை அணிந்தவர்கள் அந்த பாபத்தினின்று நிவர்த்தி அடைவர் என்று சொல்லப்படுகிறது.
ருத்ராட்சம் எனும் வித்துக்கு இத்தனை சக்தி இருப்பது போன்று பச்சிலைகள், பூக்களுக்கும் எத்தனையோ சக்தி உண்டு. மந்திர பீஜங்களும் அளப்பரிய சக்திகளைக் கொண்டுள்ளதால் நிழல் போல் நின்று நம்மைக் காக்கும்.
- க. சுகுமாறன்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.