Tuesday, October 6, 2015

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்


Image result for olympic rings

இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.

ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்



உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அண்மையில் 2008-ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நாட்டின் பெய்ஜிங் நகரில் நடந்தேறியது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.


பனி ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள்

பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்


வருடம்இடம்வருடம்இடம்
1924சாமொனிக்ஸ், பிரான்ஸ்1928செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA1936கார்மிஷ்ச், ஜெர்மனி
1948செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1952ஆஸ்லோ, நார்வே
1956கார்டினா, இத்தாலி1960ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA
1964இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1968க்ரெநோபில், பிரான்ஸ்
1972சாப்போரோ, ஜப்பான்1976இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA1984சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988கால்கேரி, கனடா1992ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994லில்லேஹாம்மர், நார்வே1998நாகானோ, ஜப்பான்
2002ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா
 
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக்சும் சம்மர் ஒலிம்பிக்ஸ§ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.

Posted by Thadsanamoorthy Kajavathanan at 3:17 PM 0 

2012/07/29

நன்றி :-http://kajan746.blogspot.in/

0 comments:

Post a Comment

Kindly post a comment.